Education

அம்பாறை மாவட்ட ஆசிரியர்களின் கோரிக்கைக்கிணங்க எரிபொருள் பெற்றுக் கொள்ளல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட பாடசாலை பகிஷ்கரிப்பினைத் தற்காலிகமாகக் கைவிடுவதாக இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தங்களது உரிமையின் நிமித்தம் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய ஆசிரியர்களுக்கு சங்கம் தமது நன்றியினைத் தெரிவித்துள்ளது.

பாடசாலை பகிஷ்கரிப்புத் தொடர்பான எமது அறிவிப்பினைத் தொடர்ந்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் ஆளுநர் நடத்திய கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு எரிபொருள்களை வழங்குவதற்கு வழிசெய்வதுடன் பாடசாலை நாட்களை மூன்றாகக் குறைப்பதெனவும் அறிவித்துள்ளார். 

இதனை வலயக் கல்விப்பணிப்பாளர்கள் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளனர். வலயக் கல்விப் பணிமனை உயர் அதிகாரிகளும் இதற்கான உறுதி மொழிகளை எழுத்து மூலம் வழங்கியுள்ளனர். 

இவ்வாறான சாதகமான சூழ்நிலையொன்று ஏற்படும் போது பகிஷ்கரிப்பினைக் கைவிடுவதன் அவசியத்தை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மட்டத்திலும் கோரிக்கை விடுக்கப்பட்டதன் நிமித்தம் நாளை (1) முதல் பாடசாலைக்குச் செல்வதற்கான அழைப்பினை விடுப்பதென சங்கத்தின் உயர்பீடம் தீர்மானித்துள்ளது.

போராட்டங்கள் என்பது யாரையும் எதிர்ப்படுத்துவதல்ல. எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான கதவுகளைத் திறக்க வைப்பதே. அவ்வகையில் ஆசிரியர்களது பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளின் காதுகளை எட்டச் செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் நமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இவ்விடயம் தொடர்பில் ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டு வந்த மாகாணக் கல்விப் பணிப்பாளர் மற்றும் அம்பாறை மாவட்ட கல்வி வலயங்களின் பணிப்பாளர்களுக்கும் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவ் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Visitors Stats
Flag Counter
Popular This Week
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய பின்னர் ? அரசியலமைப்பு கூறுவது இதுதான் !
2022-07-10 22:26:49 | Politics
வெப்பத்தால் திணறும் ஐரோப்பா : 1,000 க்கும் அதிகமானோர் பலி
2022-07-18 23:42:17 | Death
ஜனாதிபதிக்குரிய கொடியை கொண்டு சென்று படுக்கை விரிப்பாக பயன்படுத்தியவர் கைது : வீடியோ ஒன்றில் எரிக்கவுள்ளதாக தெரிவிப்பு
2022-07-29 21:43:51 | Arrest
இலங்கையில் 7 மாதங்களில் 6 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம்
2022-08-05 21:47:52 | General Issue
வடிவேல் சுரேஸ் MP மீதும் தாக்குதல் : வைத்தியசாலையில் அனுமதி
2022-07-10 22:29:40 | Politics
பாராளுமன்றம் கூடுகிறது ! இடைக்கால ஜனாதிபதி தெரிவிற்கான வேட்புமனு தாக்கல் இன்று ! நாளை இரகசிய வாக்கெடுப்பு ! களத்தில் ரணில், சஜித், அனுரகுமார, டளஸ்
2022-07-19 09:01:24 | Politics
அமரகீரத்தி எம்.பி. உள்ளிட்ட மூவர் கொலை : 8 சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்
2022-07-29 21:47:22 | Crime
கூரையை உடைத்து வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் மீட்பு
2022-08-05 21:52:47 | General Issue
லங்கா IOC நிறுவனத்துக்கு மூன்று எரிபொருள் கப்பல்கள் வருகின்றன : ஒவ்வொன்றும் தலா 30,000 மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் டீசலை தாங்கியவாறு வந்தடையவுள்ளது
2022-07-10 22:41:06 | General Issue
வாக்களிக்க வருவோருக்கு விசேட பாதுகாப்பு பாராளுமன்ற வீதிகள் முழுமையாக பூட்டு : ஊடகவியலாளர்களுக்கு விசேட அனுமதி : எம்.பிக்களுக்கான எரிபொருள் வழங்க திட்டம்
2022-07-19 09:19:13 | Politics