எம்.எப்.எம். பஸீர்
Politics


சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் ஊழியர் மட்ட இணக்கப்பாட்டை எட்டினாலும், கடன் வழங்குனர்களுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். இலங்கைக்கு உதவ முடியாதவாறு சர்வதேச நாணய நிதியத்தின் கைகளும் கட்டப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் வரை நாட்டின் தற்போதைய தேவைகளை நிறைவு செய்வதற்காக குறுகிய கால வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

அடுத்த 4 மாதங்களுக்கு 4 பில்லியன் டொலர் தேவைப்பாடு காணப்படுகிறது. அத்தோடு சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, பிணைமுறி கடன்கள் உள்ளிட்டவற்றை செலுத்தாமலிருக்க முடியாது. இதற்கு வெளிநாடுகளிடம் கடன் கோர முடியாது. எனவே நட்பு நாடுகளிடமே உதவி கோர வேண்டும். இந்த உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு ஆழமான பொருளாதார மறுசீரமைப்புக்களை மேற்கொள்வது அத்தியாவசியமானதாகும்.

அதற்கமைய வரி, செலவு, நிவாரணம், அரச நிதி, அரச நிறுவனங்கள், அரச சேவை, ஓய்வூதியம் உள்ளிட்ட கொள்கைகளில் ஆழமான மறுசீரமைப்புக்களை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறன்றி இந்த நெருக்கடிகளிலிருந்து மீள முடியாது.

இதற்கு முன்னர் 16 சந்தர்ப்பங்களில் சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருக்கின்றோம். அந்த சந்தர்ப்பங்களில் சர்வதேச நாணய நிதியத்துடன் மாத்திரமே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டோம். ஆனால் இம்முறை மூன்றாம் தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

எமக்கு கடன் வழங்கியுள்ளவர்களே அந்த மூன்றாம் தரப்பினராவர். கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இவர்களிடம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக சர்வதேச மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட இரு நிறுவனங்களின் அதிகாரிகள் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தற்போது பொருளாதாரம் குறித்த தரவுகளை மதிப்பாய்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டிய தரவுகளைக் கூட முழுமையாக பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை காணப்படுகிறது.

இதனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த பாராளுமன்ற அமர்வில் வெளிப்படுத்தியிருந்தார். இந்த மதிப்பாய்வுகள் நிறைவடைந்த பின்னரே குறித்த நிறுவனங்கள் கடன் வழங்குனர்களுடனான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும்.

எனவே சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட இணக்கப்பாட்டினை எட்டினாலும், கடன் வழங்குனர்களுடனான பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால், கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்.

அரசாங்கம் ஆழமான பொருளாதார மறுசீரமைப்புக்கள் தொடர்பில் பின்பற்றவுள்ள கொள்கைகளின் அடிப்படையிலேயே கடன் வழங்குனர்களின் தீர்மானம் அமைந்துள்ளது. ஆழமான பொருளாதார மறுசீரமைப்புக்களை இந்த அரசாங்கத்தினால் தனித்து மேற்கொள்ள முடியாது. எனவேதான் சர்வ கட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம்.

கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகாமல் இருக்கின்ற ஒவ்வொரு நிமிடமும் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் அதிகரிக்கவே செய்யும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்பட்ட போதே நாட்டை கட்டியெழுப்ப முடியாமல் போன இந்த அரசாங்கத்திற்கு, தற்போது எவ்வாறு அதனை செய்ய முடியும் ? 

இப்போது சர்வ கட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்பது கோரிக்கை அல்ல. அது அத்தியாவசிய தேவையாகியுள்ளது. இதற்கு வழிவிட்டு கோட்டாபய ராஜபக்ஷ உடன் பதவி விலக வேண்டும் என்றார்.
 

Visitors Stats
Flag Counter
Popular This Week
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய பின்னர் ? அரசியலமைப்பு கூறுவது இதுதான் !
2022-07-10 22:26:49 | Politics
வெப்பத்தால் திணறும் ஐரோப்பா : 1,000 க்கும் அதிகமானோர் பலி
2022-07-18 23:42:17 | Death
ஜனாதிபதிக்குரிய கொடியை கொண்டு சென்று படுக்கை விரிப்பாக பயன்படுத்தியவர் கைது : வீடியோ ஒன்றில் எரிக்கவுள்ளதாக தெரிவிப்பு
2022-07-29 21:43:51 | Arrest
இலங்கையில் 7 மாதங்களில் 6 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம்
2022-08-05 21:47:52 | General Issue
வடிவேல் சுரேஸ் MP மீதும் தாக்குதல் : வைத்தியசாலையில் அனுமதி
2022-07-10 22:29:40 | Politics
பாராளுமன்றம் கூடுகிறது ! இடைக்கால ஜனாதிபதி தெரிவிற்கான வேட்புமனு தாக்கல் இன்று ! நாளை இரகசிய வாக்கெடுப்பு ! களத்தில் ரணில், சஜித், அனுரகுமார, டளஸ்
2022-07-19 09:01:24 | Politics
அமரகீரத்தி எம்.பி. உள்ளிட்ட மூவர் கொலை : 8 சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்
2022-07-29 21:47:22 | Crime
கூரையை உடைத்து வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் மீட்பு
2022-08-05 21:52:47 | General Issue
லங்கா IOC நிறுவனத்துக்கு மூன்று எரிபொருள் கப்பல்கள் வருகின்றன : ஒவ்வொன்றும் தலா 30,000 மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் டீசலை தாங்கியவாறு வந்தடையவுள்ளது
2022-07-10 22:41:06 | General Issue
வாக்களிக்க வருவோருக்கு விசேட பாதுகாப்பு பாராளுமன்ற வீதிகள் முழுமையாக பூட்டு : ஊடகவியலாளர்களுக்கு விசேட அனுமதி : எம்.பிக்களுக்கான எரிபொருள் வழங்க திட்டம்
2022-07-19 09:19:13 | Politics