கலன்பிந்துனுவெவ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ள விபத்து ஒன்றில் 13 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நேற்றுக் காலை இடம்பெற்றுள்ளது.
போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால் லொறியொன்றில் பயணித்துள்ள பாடசாலை மாணவர்களே லொறியின் பின்பக்க கதவு உடைந்து விழுந்ததில் விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான லொறியில் 37 பாடசாலை மாணவர்கள் பயணித்துள்ள நிலையில் அவர்களின் 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பிரதேசவாசிகளின் ஒத்துழைப்புடன் காயமுற்ற சிறுவர்கள் கலன்பிந்துனுவெவ போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனையடுத்து மூன்று மாணவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்துள்ள பாடசாலை மாணவர்கள் தொடர்பில் தெரிவித்துள்ள கலன்பிந்துனுவெவ வைத்தியசாலையின் அதிகாரி, காயமடைந்துள்ள ஒரு மாணவரின் கால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.மேற்படி விபத்து சம்பவம் தொடர்பில் கலன்பிந்துனுவெவ பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2022 Ceylon Media Forum. All rights reserved | Solution by Syntaks