எம்.எம். சில்வெஸ்டர்
Sports

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள 2 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை குழாத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் மஹீஷ் திக்ஷன, துனித் வெல்லாலகே, லக்ஷித்த மனசிங்க ஆகிய சுழல்பந்து வீச்சாளர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த மூவரில் மனசிங்கவைத் தவிர மற்றைய இருவரும் சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் இலங்கைக்காக விளையாடியுள்ளனர். ஆனால், மூவரும் இதுவரை டெஸ்ட் அறிமுகம் பெறவில்லை.

முதல் டெஸ்டில் விளையாடிய லசித் எம்புல்தெனிய இலங்கை குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாலும் ப்ரவீன் ஜயவிக்ரம கொவிட்டினால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாலும் இந்த மூவரில் ஒருவர் 2ஆவது டெஸ்டில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடது கை சுழல்பந்து வீச்சாளரான 19 வயதுடைய துனித் வெல்லாலகே, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 9 விக்கெட்களைக் கைப்பற்றி அதிக விக்கெட்களைக் கைப்பற்றியோர் வரிசையில் முதலிடத்தில் இருந்தார்.

மஹீஷ் தீக்ஷன 4 விக்கெட்களை மாத்திரம் வீழ்த்தியபோதிலும் அவுஸ்திரேலியா துடுப்பாட்ட வீரர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தினார்.

இதேவேளை அவுஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற 2 போட்டிகளில் லக்ஷித மனசிங்க 13 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார்.

இந்த மூவரில் வெல்லாலகே சகலதுறைகளிலும் பிரகாசிக்கக்கூடியவர் என்பதால் அவருக்கு டெஸ்ட் அறிமுகம் கிடைக்கலாம்  என  எதிர்பார்க்கப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க, முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளன்று கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஏஞ்சலோ மெத்யூஸின்   5 நாள் தனிமைப்படுத்தல் இன்றுடன் நிறைவடைகின்றது. இதன் காரணமாக 2ஆவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.

Visitors Stats
Flag Counter
Popular This Week
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய பின்னர் ? அரசியலமைப்பு கூறுவது இதுதான் !
2022-07-10 22:26:49 | Politics
வெப்பத்தால் திணறும் ஐரோப்பா : 1,000 க்கும் அதிகமானோர் பலி
2022-07-18 23:42:17 | Death
ஜனாதிபதிக்குரிய கொடியை கொண்டு சென்று படுக்கை விரிப்பாக பயன்படுத்தியவர் கைது : வீடியோ ஒன்றில் எரிக்கவுள்ளதாக தெரிவிப்பு
2022-07-29 21:43:51 | Arrest
இலங்கையில் 7 மாதங்களில் 6 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம்
2022-08-05 21:47:52 | General Issue
வடிவேல் சுரேஸ் MP மீதும் தாக்குதல் : வைத்தியசாலையில் அனுமதி
2022-07-10 22:29:40 | Politics
பாராளுமன்றம் கூடுகிறது ! இடைக்கால ஜனாதிபதி தெரிவிற்கான வேட்புமனு தாக்கல் இன்று ! நாளை இரகசிய வாக்கெடுப்பு ! களத்தில் ரணில், சஜித், அனுரகுமார, டளஸ்
2022-07-19 09:01:24 | Politics
அமரகீரத்தி எம்.பி. உள்ளிட்ட மூவர் கொலை : 8 சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்
2022-07-29 21:47:22 | Crime
கூரையை உடைத்து வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் மீட்பு
2022-08-05 21:52:47 | General Issue
லங்கா IOC நிறுவனத்துக்கு மூன்று எரிபொருள் கப்பல்கள் வருகின்றன : ஒவ்வொன்றும் தலா 30,000 மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் டீசலை தாங்கியவாறு வந்தடையவுள்ளது
2022-07-10 22:41:06 | General Issue
வாக்களிக்க வருவோருக்கு விசேட பாதுகாப்பு பாராளுமன்ற வீதிகள் முழுமையாக பூட்டு : ஊடகவியலாளர்களுக்கு விசேட அனுமதி : எம்.பிக்களுக்கான எரிபொருள் வழங்க திட்டம்
2022-07-19 09:19:13 | Politics