இராஜதுரை ஹஷான்
Government

இணையச் சேவை வழங்குநர்களை நாளை காலை முதல் குரல் வழி தொடர்பாடல்களுக்கு மாத்திரம் அனுமதியை வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் கடிதம் போலியானது என இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

அவ்வாறான கட்டுப்பாடுகள் குறித்தோ அல்லது வேறு முடக்கல்கள் குறித்தோ திட்டமிடப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்

இதேவேளை தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக குரல் தொடர்பாடல்களை மாத்திரம் அனுமதிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் கடிதத்தினை  மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியாகியுள்ளது

குறிப்பிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தேசிய புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச சனிக்கிழமை 9 ஆம் திகதி கொழும்பின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக காலி முகத்திடளுக்கு  அருகாமையில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவுள்ளன என தொழில்நுட்ப அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

வன்முறைக் கும்பல் உயிர்களுக்கு, உடமைகளுக்கு சேதத்தை ஏற்படுத்த முயல்கின்றது எனவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் சமூக ஊடக மற்றும் தொலைத் தொடர்பு வலையமைப்புகளை நிலைமயை தீவிரப்படுத்துவதற்கும்,  பிழையான தகவல்களை வழங்குவதற்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

இதன் காரணமாக பாதுகாப்பு அமைச்சரும் தொழில்நுட்ப விவகாரங்களுக்கான அமைச்சருமான ஜனாதிபதி நாளை காலை ஆறு மணி முதல் மறு அறிவித்தல் வரும் வரை குரல் வழி தொடர்பாடல்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார் என அந்தக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Visitors Stats
Flag Counter
Popular This Week
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய பின்னர் ? அரசியலமைப்பு கூறுவது இதுதான் !
2022-07-10 22:26:49 | Politics
வெப்பத்தால் திணறும் ஐரோப்பா : 1,000 க்கும் அதிகமானோர் பலி
2022-07-18 23:42:17 | Death
ஜனாதிபதிக்குரிய கொடியை கொண்டு சென்று படுக்கை விரிப்பாக பயன்படுத்தியவர் கைது : வீடியோ ஒன்றில் எரிக்கவுள்ளதாக தெரிவிப்பு
2022-07-29 21:43:51 | Arrest
இலங்கையில் 7 மாதங்களில் 6 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம்
2022-08-05 21:47:52 | General Issue
வடிவேல் சுரேஸ் MP மீதும் தாக்குதல் : வைத்தியசாலையில் அனுமதி
2022-07-10 22:29:40 | Politics
பாராளுமன்றம் கூடுகிறது ! இடைக்கால ஜனாதிபதி தெரிவிற்கான வேட்புமனு தாக்கல் இன்று ! நாளை இரகசிய வாக்கெடுப்பு ! களத்தில் ரணில், சஜித், அனுரகுமார, டளஸ்
2022-07-19 09:01:24 | Politics
அமரகீரத்தி எம்.பி. உள்ளிட்ட மூவர் கொலை : 8 சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்
2022-07-29 21:47:22 | Crime
கூரையை உடைத்து வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் மீட்பு
2022-08-05 21:52:47 | General Issue
லங்கா IOC நிறுவனத்துக்கு மூன்று எரிபொருள் கப்பல்கள் வருகின்றன : ஒவ்வொன்றும் தலா 30,000 மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் டீசலை தாங்கியவாறு வந்தடையவுள்ளது
2022-07-10 22:41:06 | General Issue
வாக்களிக்க வருவோருக்கு விசேட பாதுகாப்பு பாராளுமன்ற வீதிகள் முழுமையாக பூட்டு : ஊடகவியலாளர்களுக்கு விசேட அனுமதி : எம்.பிக்களுக்கான எரிபொருள் வழங்க திட்டம்
2022-07-19 09:19:13 | Politics