BBC Tamil
Science

இதுவரை இல்லாத தெளிவோடும், ஆழத்தோடும் கூடிய ஒரு விண்வெளிப் படம் ஒன்றை ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி திங்கட்கிழமை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

4.6 பில்லியன் ஒளியாண்டு தூரத்தில் இருந்த உடுத்திரள் கூட்டத்தைக் காட்டும் இந்தப் படம் பின்னணியில் 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பேரண்டத்தின் காட்சியையும் காட்டியது.

இந்நிலையில், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த மேலும் சில வியப்பூட்டும் படங்களை நாசா செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

ஐந்து உடுத்திரள்கள் (நட்சத்திரக் கூட்டங்கள்) நடனமாடும் பாவனையில் அருகருகே அமைந்திருப்பதைக் காட்டும் படம் ஒன்றும், உடுக்களை (நட்சத்திரங்களை) பிரசவிக்கும் ஒளிமயமான முகடுகளும் இந்தப் படங்களில் அடக்கம்.

அமெரிக்க, ஐரோப்பிய, கனடிய விண்வெளி முகமைகள் சேர்ந்து 1000 கோடி டொலர் செலவில் உருவாக்கிய இந்த விண்வெளி தொலைநோக்கி மாபெரும் சாதனைகளைப் படைத்த ஹபிள் விண்வெளி தொலைநோக்கியின் வாரிசாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஜேம்ஸ் வெப் வெளியிட்ட இந்த வியப்பூட்டும் படங்கள் அது அறிவியல் சார்ந்த பணிகளைத் தொடக்க ஆயத்தமாக இருப்பதைக் காட்டுகிறது. 

விண்ணில் கடந்த டிசம்பர் மாதம் ஏவப்பட்ட இந்த தொலைநோக்கி, கடந்த 6 மாதமாக தனது அதிநவீன கருவிகளை பரிசோதித்து வந்தது. 

அடுத்து வரும் 20 ஆண்டுகளுக்கு விண்வெளி ஆராய்ச்சியில் இந்த தொலைநோக்கி ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொலைநோக்கி பேரண்டத்தை அகச்சிவப்பு படங்களாக எடுப்பதால், முந்தைய விண்வெளி தொலைநோக்கிகளை விட வெகு தூரத்தை, துல்லியமாக இதனால் படம் பிடிக்க முடிகிறது.

13.8 பில்லியன் ஆண்டுகள் (1380 கோடி ஆண்டுகள்) முன்பு பெரு வெடிப்பு மூலம் பேரண்டம் தோன்றியது என்கிறார்கள் அறிவியலாளர்கள். ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி இதில் 13.5 பில்லியன் ஆண்டு முன்பு வரை சென்று படம் எடுக்க முடியும் என்று நாசா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

நமது பால்வெளி மண்டலத்தில் உள்ள பல கோள்களை ஆராய்ந்து அதில் உயிர்கள் எதிலும் உள்ளதா என்று பார்க்க இந்த தொலைநோக்கியின் அதிநவீன தொழில்நுட்பக் கருவிகளை விண்வெளி ஆய்வாளர்கள் பயன்படுத்துவார்கள்.

இனி ஜேம்ஸ் வெப் வெளியிட்ட புதிய படங்களும் விளக்கமும்

கரீனா நெபுலா - நட்சத்திரங்களின் பிரசவ விடுதி

பேரண்டத்தின் காட்சியை வியக்க வைக்கும் வகையில் படமெடுத்த முதல் தலைமுறை விண்வெளி தொலைநோக்கி ஹபிள். 

விண்வெளியில் புவியின் கண் என்று வருணிக்கப்பட்ட ஹபிள் எடுத்த படங்களில் முக்கியமானது கரீனா விண்முகிலின் படம். 

நெபுலா என்று அழைக்கப்படும் விண்முகில்கள் தூசியும், வாயுக்களும் அடங்கியவை மேகக்கூட்டம் போன்ற பகுதி ஆகும். இவற்றில் இருந்தே நட்சத்திரங்கள் பிறக்கின்றன.

புவியில் இருந்து சுமார் 7,600 ஒளி ஆண்டு தூரத்தில் அமைந்துள்ள இந்த கரீனா வெண்முகில் மிக பிரம்மாண்டமான, மிகுந்த பிரகாசமான விண்முகில் கூட்டம். 

வெறும் கண்களோடு விண்ணில் பார்த்தால் இந்த விண்முகில் கூட்டத்தை பார்க்க முடியாது. காரணம், தூசியும், வாயுக்களும் இந்தக் காட்சியைப் பார்க்க முடியாமல் மறைத்திருக்கும்.

முதலில் ஹபிள் தொலைநோக்கி இந்தப் பகுதியைப் படமெடுத்திருந்தாலும் ஜேம்ஸ் வெப் இதனை வித்தியாசமான முறையில் படமெடுத்துள்ளது.

இந்தப் படத்தில் மேல் பாதி வாயுக்கள் அடங்கிய பகுதி. கீழ்ப் பாதி தூசி அடங்கிய பகுதி. இந்த தூசி அடங்கிய பகுதி பார்ப்பதற்கு மலை முகடுகள் போல அமைந்துள்ளது. இந்த இரண்டு பகுதிகளையும் தெளிவாகப் பிரித்துக் காட்டும் அளவுக்கு இந்தப் படம் துல்லியமாக அமைந்துள்ளது.

தெற்கத்திய வளைம்

புவியில் இருந்து 2 ஆயிரம் ஒளி ஆண்டு தூரத்தில் அமைந்துள்ள தெற்கத்திய வளையம். எய்ட் பர்ஸ்ட் நெபுலா என்று அழைக்கப்படும் இந்த விரிவடையும் பிரும்மாண்ட விண்முகிலின் நடுவில் இறந்து கொண்டிருக்கும் நட்சத்திரம் ஒன்று ஒளியூட்டிக் கொண்டிருக்கிறது. நியர் இன்ஃப்ராரெட் மற்றும் மிட் இன்ஃப்ராரெட் முறையில் ஜேம்ஸ் வெப் எடுத்த படங்கள் இவை.

ஸ்டெஃபான்ஸ் குவின்டெட் : 5 உடுத் திரள்களின் அண்டவெளி நடனம்

290 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் அமைந்துள்ள காட்சி இது. ஜேம்ஸ் வெப் எடுத்த வியப்பூட்டும் துல்லியத்துடன் அமைந்த இந்தப் படத்தில் ஐந்து உடுத்திரள்கள் வெவ்வேறு கோணத்தில் நடனமாடுவது போன்ற பாவனையில் இணைந்துள்ளன. 

பெகாசஸ் ராசியில் அமைந்துள்ள இந்தப் பகுதிக்குப் பெயர் ஸ்டெஃபான்ஸ் குவின்டெட். மிக நெருக்கமாக உடுத்திரள்கள் சேர்ந்துள்ள கூட்டம் இது. அடிக்கடி இந்த உடுத்திரள்கள் நெருங்கியும், விலகியும் சென்று நடனமாடுவது போன்ற தோற்றத்தைக் கொடுக்கும்.

Visitors Stats
Flag Counter
Popular This Week
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய பின்னர் ? அரசியலமைப்பு கூறுவது இதுதான் !
2022-07-10 22:26:49 | Politics
வெப்பத்தால் திணறும் ஐரோப்பா : 1,000 க்கும் அதிகமானோர் பலி
2022-07-18 23:42:17 | Death
ஜனாதிபதிக்குரிய கொடியை கொண்டு சென்று படுக்கை விரிப்பாக பயன்படுத்தியவர் கைது : வீடியோ ஒன்றில் எரிக்கவுள்ளதாக தெரிவிப்பு
2022-07-29 21:43:51 | Arrest
இலங்கையில் 7 மாதங்களில் 6 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம்
2022-08-05 21:47:52 | General Issue
வடிவேல் சுரேஸ் MP மீதும் தாக்குதல் : வைத்தியசாலையில் அனுமதி
2022-07-10 22:29:40 | Politics
பாராளுமன்றம் கூடுகிறது ! இடைக்கால ஜனாதிபதி தெரிவிற்கான வேட்புமனு தாக்கல் இன்று ! நாளை இரகசிய வாக்கெடுப்பு ! களத்தில் ரணில், சஜித், அனுரகுமார, டளஸ்
2022-07-19 09:01:24 | Politics
அமரகீரத்தி எம்.பி. உள்ளிட்ட மூவர் கொலை : 8 சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்
2022-07-29 21:47:22 | Crime
கூரையை உடைத்து வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் மீட்பு
2022-08-05 21:52:47 | General Issue
லங்கா IOC நிறுவனத்துக்கு மூன்று எரிபொருள் கப்பல்கள் வருகின்றன : ஒவ்வொன்றும் தலா 30,000 மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் டீசலை தாங்கியவாறு வந்தடையவுள்ளது
2022-07-10 22:41:06 | General Issue
வாக்களிக்க வருவோருக்கு விசேட பாதுகாப்பு பாராளுமன்ற வீதிகள் முழுமையாக பூட்டு : ஊடகவியலாளர்களுக்கு விசேட அனுமதி : எம்.பிக்களுக்கான எரிபொருள் வழங்க திட்டம்
2022-07-19 09:19:13 | Politics