எம்.எப்.எம். பஸீர்
Education

அரசாங்க மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் தனியார் பாடசாலைகள் அனைத்துக்கும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சு இன்று தெரிவித்தது.

ஏற்கனவே எதிர்வரும் 18 ஆம் திகதி வரை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்ததுடன் அந்த விடுமுறையைத் தொடர்ந்து எதிர்வரும் 20ஆம் திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் அனைத்து பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் எதிர்கொள்ள நேர்ந்துள்ள போக்குவரத்து தொடர்பான அசௌகரியங்களை கவனத்திற் கொண்டே கல்வியமைச்சு மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளது.

கல்வி அமைச்சில் இன்று அமைச்சின் செயலாளர் தலைமையில் விசேட கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. அந்தக் கூட்டத்துக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டுக்கமையவே எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகளை கல்வி நடவடிக்கைகளுக்காக திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Visitors Stats
Flag Counter
Popular This Week
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய பின்னர் ? அரசியலமைப்பு கூறுவது இதுதான் !
2022-07-10 22:26:49 | Politics
வெப்பத்தால் திணறும் ஐரோப்பா : 1,000 க்கும் அதிகமானோர் பலி
2022-07-18 23:42:17 | Death
ஜனாதிபதிக்குரிய கொடியை கொண்டு சென்று படுக்கை விரிப்பாக பயன்படுத்தியவர் கைது : வீடியோ ஒன்றில் எரிக்கவுள்ளதாக தெரிவிப்பு
2022-07-29 21:43:51 | Arrest
இலங்கையில் 7 மாதங்களில் 6 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம்
2022-08-05 21:47:52 | General Issue
வடிவேல் சுரேஸ் MP மீதும் தாக்குதல் : வைத்தியசாலையில் அனுமதி
2022-07-10 22:29:40 | Politics
பாராளுமன்றம் கூடுகிறது ! இடைக்கால ஜனாதிபதி தெரிவிற்கான வேட்புமனு தாக்கல் இன்று ! நாளை இரகசிய வாக்கெடுப்பு ! களத்தில் ரணில், சஜித், அனுரகுமார, டளஸ்
2022-07-19 09:01:24 | Politics
அமரகீரத்தி எம்.பி. உள்ளிட்ட மூவர் கொலை : 8 சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்
2022-07-29 21:47:22 | Crime
கூரையை உடைத்து வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் மீட்பு
2022-08-05 21:52:47 | General Issue
லங்கா IOC நிறுவனத்துக்கு மூன்று எரிபொருள் கப்பல்கள் வருகின்றன : ஒவ்வொன்றும் தலா 30,000 மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் டீசலை தாங்கியவாறு வந்தடையவுள்ளது
2022-07-10 22:41:06 | General Issue
வாக்களிக்க வருவோருக்கு விசேட பாதுகாப்பு பாராளுமன்ற வீதிகள் முழுமையாக பூட்டு : ஊடகவியலாளர்களுக்கு விசேட அனுமதி : எம்.பிக்களுக்கான எரிபொருள் வழங்க திட்டம்
2022-07-19 09:19:13 | Politics