ABC NEWS
Death

ஐரோப்பாவெங்கும் வளிமண்டல வெப்பநிலை அதிகரித்து அனல் காற்று வீசுவதால் காட்டுத் தீ வேகமாகப் பரவி வருகிறது.

போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயினில் கடும் வெப்பம் காரணமாக பலியானவர்கள் தொகை 1,000 பேரையும் கடந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு  உயிரிழந்தவர்களில் அநேகர் வெப்பம் தொடர்பான அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.

காட்டுத் தீயால்; மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பிரான்ஸில் வெப்பநிலை 44 பாகை  செல்சியஸாக உயரவுள்ளதாக  எதிர்வுகூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தென் மேற்கு பிரான்ஸிலுள்ள ஜிரொனட் பிராந்தியத்திலிருந்து மட்டும் காட்டுத் தீ காரணமாக  16,000 பேருக்கும் அதிகமானோர் வெளியேறியுள்ளனர். அந்தப் பிராந்தியத்தில் 14,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பகுதி எரிந்து கருகியுள்ளது.

ஸ்பெயினில் 36   இடங்களில் காட்டுத் தீ பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.  இந்நிலையில் நேற்று  ஞாயிற்றுக்கிழமை காட்டுத் தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 62 வயதான தீயணைப்புப் படைவீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் பிரித்தானியாவில் வரலாறு காணாத வகையில்  43 பாகை செல்சியஸ்  வரை வெப்பநிலை உயரலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அவ்வாறு  வெப்பநிலை உயரும் பட்சத்தில்  பல்லாயிரக்கணக்hனோர் உயிரிழக்கலாம் என  எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேற்படி வெப்பநிலை அதிகரிப்பிற்கு காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினையே காரணம் என  நிபுணர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 

Visitors Stats
Flag Counter
Popular This Week
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய பின்னர் ? அரசியலமைப்பு கூறுவது இதுதான் !
2022-07-10 22:26:49 | Politics
வெப்பத்தால் திணறும் ஐரோப்பா : 1,000 க்கும் அதிகமானோர் பலி
2022-07-18 23:42:17 | Death
ஜனாதிபதிக்குரிய கொடியை கொண்டு சென்று படுக்கை விரிப்பாக பயன்படுத்தியவர் கைது : வீடியோ ஒன்றில் எரிக்கவுள்ளதாக தெரிவிப்பு
2022-07-29 21:43:51 | Arrest
இலங்கையில் 7 மாதங்களில் 6 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம்
2022-08-05 21:47:52 | General Issue
வடிவேல் சுரேஸ் MP மீதும் தாக்குதல் : வைத்தியசாலையில் அனுமதி
2022-07-10 22:29:40 | Politics
பாராளுமன்றம் கூடுகிறது ! இடைக்கால ஜனாதிபதி தெரிவிற்கான வேட்புமனு தாக்கல் இன்று ! நாளை இரகசிய வாக்கெடுப்பு ! களத்தில் ரணில், சஜித், அனுரகுமார, டளஸ்
2022-07-19 09:01:24 | Politics
அமரகீரத்தி எம்.பி. உள்ளிட்ட மூவர் கொலை : 8 சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்
2022-07-29 21:47:22 | Crime
கூரையை உடைத்து வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் மீட்பு
2022-08-05 21:52:47 | General Issue
லங்கா IOC நிறுவனத்துக்கு மூன்று எரிபொருள் கப்பல்கள் வருகின்றன : ஒவ்வொன்றும் தலா 30,000 மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் டீசலை தாங்கியவாறு வந்தடையவுள்ளது
2022-07-10 22:41:06 | General Issue
வாக்களிக்க வருவோருக்கு விசேட பாதுகாப்பு பாராளுமன்ற வீதிகள் முழுமையாக பூட்டு : ஊடகவியலாளர்களுக்கு விசேட அனுமதி : எம்.பிக்களுக்கான எரிபொருள் வழங்க திட்டம்
2022-07-19 09:19:13 | Politics