ஷம்ஸ் பாஹிம்
Politics

புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நாளை 20 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன் அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று நடைபெறுகிறது. அதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு இதனையொட்டி பாராளுமன்றத்தில் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிய வருகிறது. பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.  

பாராளுமன்றம் இன்று காலை 10.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவின் தலைமையில் கூடுகிறது. வேட்புமனுத் தாக்களுக்களுக்காக மாத்திரமே பாராளுமன்றம் இன்று கூடுகிறது. 

இதன்போது தெரிவத்தாட்சி அதிகாரியாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் செயற்படுவதோடு அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்களின் பெயர்கள் முன்மொழியப்பட இருப்பதாக அறிய வருகிறது.

இலங்கை அரசியல் வரலாற்றில் பாராளுமன்றத்தின் ஊடாக இரண்டாவது முறையாக ஜனாதிபதியொருவரை தெரிவு செய்யும் நாளாக நாளைய நாள் பதிவாகவுள்ளமை விசேட அம்சமாகும்.

புதிய ஜனாதிபதி தெரிவுக்கான போட்டியில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அழகப்பெரும, அனுர குமார திசாநாயக்க ஆகியோர் களமிறங்க தயாராக இருக்கின்றனர். 

ஆனால் கடந்த சில நாட்களாகவே கட்சிகளிடையே தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதோடு நேற்று பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படும் கட்சிகளிடையேயும் சிறுபான்மை கட்சிகளிடையேயும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இது தவிர போராட்டக்காரர்களுக்கும் கட்சிப் பிரதிநிதிகளுக்குமிடையிலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. 

உடன்பாடு எட்டப்படும் நிலையில் இறுதி நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திசாநாயக்கவும் வேட்புமனுத் தாக்கல் செய்யாது விலகலாமென அறிய வருகிறது. இது தவிர இதுவரை போட்டியிடுவதாக அறிவிக்காத ஓரிருவர் வேட்புமனு தாக்கல் செய்யத் தயாராக இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

பதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கப்போவதாக பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் அறிவித்துள்ளார். ஆனால் இது தொடர்பில் கட்சிக்குள் மாறுபட்ட கருத்து காணப்படுவதோடு பொதுஜன பெரமுன எம்.பியான டளஸ் அழகப்பெருமவும் போட்டியிடுவதால் அவருக்கு ஆதரவு வழங்கப் போவதாக சில பொதுஜன பெரமுன எம்.பிக்கள் அறிவித்துள்ளனர். சுயாதீனமாக செயற்படும் கட்சிகளும் அவருக்கு ஆதரவு வழங்கலாமென அறிய வருவதோடு ஏனைய கட்சிகளின் ஆதரவை பெற அவரது தரப்பு பேச்சு நடத்தி வருகிறது. 

தமது கட்சி டளஸ் அழகப்பெரும எம்.பியை ஆதரிக்குமென வாசுதேவ நாணயக்கார அறிவித்துள்ளார். இது தவிர ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட அதனோடு இணைந்த கட்சிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளன. எதிரணியிலுள்ள மலையக கட்சிகள் மற்றும் முஸ்லிம் கட்சிகளும் அவருக்கு ஆதரவு வழங்க இருப்பதாக அறிய வருவதோடு சுயாதீனமாக செயற்படும் ஆளும் தரப்பு குழு மற்றும் எதிரணியிலுள்ள சிறு கட்சிகளின் ஆதரவை பெற  ஐக்கிய மக்கள் சக்தி பேச்சு நடத்தி வருகிறது. 

இந்த நிலையில், கட்சிகளிடையே பொது உடன்பாடு ஏற்படாவிட்டால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதென்று அறிவித்துள்ளது.

அந்தக் கட்சியிலுள்ள சிலர் பதில் ஜனாதிபதியை ஆதரிக்க தயாராக உள்ளதாகவும் அறிய வருகிறது. தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுரகுமார திசாநாயாக்கவும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளதோடு பொது உடன்பாடு ஏற்பாட்டால் போட்டியிடாது ஒதுங்குவதாக அவர் அறிவித்துள்ளார். அவரது கட்சியுடனும் எதிரணியிலுள்ள கட்சிகள் பேச்சு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பதில் ஜனாதிபதியை நாட்டின் ஜனாதிபதியாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை பிரதமராகவும் நியமிப்பதற்கு இரு தரப்பினருக்குமிடையில் உடன்பாடு ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக நம்பகராக அறிய வருகிறது. ஆனால் இதற்கு  ஐக்கிய மக்கள் சக்தி தரப்பில் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிய வருகிறது.

இது தவிர பொதுஜன பெரமுன எம்.பியான டளஸ் அழகப்பெருமவை ஜனாதிபதியாகவும் சஜித் பிரேமதாஸவை பிரதமராகவும் நியமிப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால் போட்டியின்றி உடன்பாட்டுடன் புதிய ஜனாதிபதி தெரிவாக வேண்டுமென சிவில் சமூகத்தினர் உட்பட பல்வேறு தரப்பினரும் கோரி வருகின்றனர். சகல கட்சிகளையும் உள்ளடக்கிய அரசாங்கமொன்று உருவாக்கப்பட்டு நெருக்கடிகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் பரவலாக கோரப்பட்டு வருகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகள் இதுவரை எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை மேற்கொள்ளவில்லையென நேற்று தெரிவித்தன.

1993 ஆம் ஆண்டு மே தினத்தன்று அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச கொல்லப்பட்டதையடுத்து, பதில் ஜனாதிபதியான டி.பி.விஜதுங்க , பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பில்லாமல் இடைக்கால ஜனாதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்டார். 

ஆனால் தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளமையால் அரசியலமைப்பின் படி நாளை பாராளுமன்றில் இரகசிய வாக்கெடுப்பின் ஊடாக புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Visitors Stats
Flag Counter
Popular This Week
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய பின்னர் ? அரசியலமைப்பு கூறுவது இதுதான் !
2022-07-10 22:26:49 | Politics
வெப்பத்தால் திணறும் ஐரோப்பா : 1,000 க்கும் அதிகமானோர் பலி
2022-07-18 23:42:17 | Death
ஜனாதிபதிக்குரிய கொடியை கொண்டு சென்று படுக்கை விரிப்பாக பயன்படுத்தியவர் கைது : வீடியோ ஒன்றில் எரிக்கவுள்ளதாக தெரிவிப்பு
2022-07-29 21:43:51 | Arrest
இலங்கையில் 7 மாதங்களில் 6 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம்
2022-08-05 21:47:52 | General Issue
வடிவேல் சுரேஸ் MP மீதும் தாக்குதல் : வைத்தியசாலையில் அனுமதி
2022-07-10 22:29:40 | Politics
பாராளுமன்றம் கூடுகிறது ! இடைக்கால ஜனாதிபதி தெரிவிற்கான வேட்புமனு தாக்கல் இன்று ! நாளை இரகசிய வாக்கெடுப்பு ! களத்தில் ரணில், சஜித், அனுரகுமார, டளஸ்
2022-07-19 09:01:24 | Politics
அமரகீரத்தி எம்.பி. உள்ளிட்ட மூவர் கொலை : 8 சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்
2022-07-29 21:47:22 | Crime
கூரையை உடைத்து வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் மீட்பு
2022-08-05 21:52:47 | General Issue
லங்கா IOC நிறுவனத்துக்கு மூன்று எரிபொருள் கப்பல்கள் வருகின்றன : ஒவ்வொன்றும் தலா 30,000 மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் டீசலை தாங்கியவாறு வந்தடையவுள்ளது
2022-07-10 22:41:06 | General Issue
வாக்களிக்க வருவோருக்கு விசேட பாதுகாப்பு பாராளுமன்ற வீதிகள் முழுமையாக பூட்டு : ஊடகவியலாளர்களுக்கு விசேட அனுமதி : எம்.பிக்களுக்கான எரிபொருள் வழங்க திட்டம்
2022-07-19 09:19:13 | Politics