BBC Tamil
Science

இன்று ஜூலை 19ஆம் திகதி பூமியை solar flare என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சூரிய கிளர்ச்சி ஒன்று தாக்கும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு முகமையான நாசா எச்சரித்துள்ளது.

சூரிய கிளர்ச்சி என்றால் என்ன?
சூரியனில் இருந்து அவ்வப்போது நெருப்புக் குழம்பு விண்ணில் உமிழப்படும். இது கொரோனல் மாஸ் எஜெக்ஷன் (coronal maas ejection) எனப்படுகிறது.

அந்தப் பிழம்பு சூரிய பொருட்களை விண்ணில் உமிழும். அந்தத் துகள்கள் பூமியை வந்தடைய 3 முதல் 5 நாட்களாகும் என்கிறது நாசா.

சூரியனில் இருந்து வெளியாகும் துகள்கள் பூமியை நெருங்கும்போது செயற்கைக் கோள்களின் மின்னணு பாகங்கள் பாதிக்கப்படும். இதனால் ரேடியோ, ஜிபிஎஸ் போன்ற சிக்னல்கள் கிடைப்பது சற்று பாதிக்கும்.

பூமியில் இருந்து பார்க்கும்போது சூரியனில் அடர்த்தியான புள்ளிகள் தென்படும். அவை 'சன் ஸ்பாட்ஸ்' எனப்படுகின்றன. இந்த சூரியப் புள்ளிகள் அல்லது சூரியப் பொட்டுகள் அருகே இருக்கும் காந்தப் புலக் கோடுகள் ஒன்றை ஒன்று கடக்கும்போதோ, அவற்றின் அமைவிடம் மறுசீரமையும்போதோ சூரியக் துகள்கள் வெளிப்படும் சூரிய கிளர்ச்சி வெடிப்புச் சம்பவங்கள் நிகழும் என்கிறது நாசா.

நமது சூரிய மண்டலத்திலேயே மிகப்பெரிய வெடிப்புச் சம்பவம் இந்த சூரிய கிளர்ச்சி நிகழ்வுகள்தான். சூரிய கிளர்ச்சியிலிருந்து வெளியாகும் ஆற்றல் மிக்க துகள்கள் மற்றும் கதிர்வீச்சு பூமியில் உள்ள உயிரிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்த வல்லவை. ஆனால், நாம் கவலைப்பட வேண்டாம். புவியின் காந்தப் புலம் மற்றும் வளி மண்டலம் ஆகியவை அவற்றைத் தடுத்து நமக்கு பாதுகாப்பளிக்கும்.

எப்படி செயல்படுகிறது?
சூரியனில் நடக்கும் அதிதீவிர காந்தப்புல மாறுபாடுகளின் விளைவாகவே இந்த சூரியக் கிளர்ச்சிகள் நடைபெறுகின்றன. இவை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நிகழ்பவை கிடையாது. சூரியனிலிருந்து வெளிவரும் பிளாஸ்மா உமிழ்வுகளுடன் இணைந்து, எப்போது வேண்டுமானாலும் தன்னிச்சையாக நடைபெறக்கூடியவை.

இந்த நிகழ்வுகள் சூரியனில் நடக்கும்போது, காந்தப்புல வடிவில் அதைக் கட்டுப்படுத்தக் கூடிய அமைப்புகளும் உண்டு. ஒன்று கயிறு போன்றது மற்றொன்று கூண்டு போன்றது. எளிமையாக புரிந்துகொள்ள வேண்டுமானால், கயிறு போன்ற அமைப்புகளால் உருவான கூண்டுகள், அதற்குள் அடுத்தடுத்த கூண்டுகள் என இந்த கட்டுப்பாட்டு முறை அமைந்திருக்கும்.

கடந்த 2014ஆம் ஆண்டு, அக்டோபர் 24ஆம் திகதி சில மணி நேரங்களில் உருவான சூரியக்கிளர்ச்சியை ஆய்வாலர்கள் கூர்ந்து கவனித்தனர். இந்த கிளர்ச்சி சூரியனின் கொரோனாப் பகுதியிலிருந்து (வெளிப்புற அடுக்கு) வரும் தீப்பொறியுடன் தொடர்புடையதாக இருக்கிறது. அதாவது கொரோனாப் பகுதியின் சூரியனின் மேற்பரப்பை விட சூடான பகுதி. இதன் அதீத வெப்பத்துக்கான காரணம் இதுவரை தெளிவாக தெரியவில்லை. இந்த வெப்பத்தின் காரணமாக இங்கிருக்கும் காந்தப்புலம் குறித்து ஆய்வு செய்ய முடிவதில்லை.

ஆனால், கொரோனாப் பகுதிக்கு 1690 கிலோ மீட்டர்கள் மேலே என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய சூரியனின் மேற்பரப்பிலிருந்து கிடைத்த தரவுகளைப் பயன்படுத்தினர்.

நாசாவின் சோலார் டைனமிக்ஸ் கண்காணிப்பு விண்கலத்தின் தரவுகள் மூலம், சூப்பர் கம்ப்யூட்டர்களில் சில மெய்நிகர் மாதிரிகளையும் உருவாக்கினர் ஆராய்ச்சியாளர்கள். அதிலிருந்து, கூண்டுகளை உடைக்கும் அளவுக்கும் கயிறுகளுக்கு திறன் போதவில்லை என்பதைக் கண்டறிந்தனர். ஒன்றொடொன்று இறுக்கி சுற்றப்பட்டுள்ள கயிறுகள், மொத்தமாக ஆற்றலை வெளிப்படுத்தும்போது ஒரு பெருவெடிப்பு போன்ற சூரியக்கிளர்ச்சி ந்டைபெறுகிறது என்றும் அவர்கள் கண்டறிந்தனர்.

Visitors Stats
Flag Counter
Popular This Week
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய பின்னர் ? அரசியலமைப்பு கூறுவது இதுதான் !
2022-07-10 22:26:49 | Politics
வெப்பத்தால் திணறும் ஐரோப்பா : 1,000 க்கும் அதிகமானோர் பலி
2022-07-18 23:42:17 | Death
ஜனாதிபதிக்குரிய கொடியை கொண்டு சென்று படுக்கை விரிப்பாக பயன்படுத்தியவர் கைது : வீடியோ ஒன்றில் எரிக்கவுள்ளதாக தெரிவிப்பு
2022-07-29 21:43:51 | Arrest
இலங்கையில் 7 மாதங்களில் 6 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம்
2022-08-05 21:47:52 | General Issue
வடிவேல் சுரேஸ் MP மீதும் தாக்குதல் : வைத்தியசாலையில் அனுமதி
2022-07-10 22:29:40 | Politics
பாராளுமன்றம் கூடுகிறது ! இடைக்கால ஜனாதிபதி தெரிவிற்கான வேட்புமனு தாக்கல் இன்று ! நாளை இரகசிய வாக்கெடுப்பு ! களத்தில் ரணில், சஜித், அனுரகுமார, டளஸ்
2022-07-19 09:01:24 | Politics
அமரகீரத்தி எம்.பி. உள்ளிட்ட மூவர் கொலை : 8 சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்
2022-07-29 21:47:22 | Crime
கூரையை உடைத்து வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் மீட்பு
2022-08-05 21:52:47 | General Issue
லங்கா IOC நிறுவனத்துக்கு மூன்று எரிபொருள் கப்பல்கள் வருகின்றன : ஒவ்வொன்றும் தலா 30,000 மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் டீசலை தாங்கியவாறு வந்தடையவுள்ளது
2022-07-10 22:41:06 | General Issue
வாக்களிக்க வருவோருக்கு விசேட பாதுகாப்பு பாராளுமன்ற வீதிகள் முழுமையாக பூட்டு : ஊடகவியலாளர்களுக்கு விசேட அனுமதி : எம்.பிக்களுக்கான எரிபொருள் வழங்க திட்டம்
2022-07-19 09:19:13 | Politics