ஆர். சனத்
Politics

இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக, ரணில் விக்கிரமசிங்க, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய  முன்னிலையில் இன்று (21)  பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இதற்கான நிகழ்வு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. 

இலங்கையில் 1978 இல்தான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை உருவாக்கப்பட்டது. அதற்கு முன்னர் பிரதமர் ஆட்சி (வெஸ்ட்மினிஸ்டர்) முறைமையே இருந்தது. 

1982 இல் நடைபெற்ற முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் ஜே.ஆர். ஜயவர்தன வெற்றி பெற்றார். 

1988 இல் நடைபெற்ற 2 ஆவது ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் ரணசிங்க பிரேமதாச வெற்றி பெற்று, 2 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்றார். 

1993 இல் பிரேமதாச கொல்லப்பட்ட பின்னர், ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் பிரதமராக இருந்த டிபி விஜேதுங்க, நாடாளுமன்றம் ஊடாக வாக்கெடுப்பின்றி, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அவர் ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்.  

அதன் பின்னர் 1994, 1999, 2005, 2010 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களின்போது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களே வெற்றி பெற்றனர். 

ஐக்கிய தேசிய கட்சியின் ஆசியுடன் 2015 இல் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றார். எனினும், அவர் ஐக்கிய தேசிய கட்சியின் அங்கத்துவத்தை பெறவில்லை. சுதந்திரக் கட்சி உறுப்பினராகவே செயற்பட்டார்.

2019 இல் மொட்டு கட்சி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்றார். 2005 இற்கு பிறகே 2019 இல்தான் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார் (சஜித்).  

கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியதால், நாடாளுமன்றம் ஊடாக 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவு செய்யப்பட்டார். அவருக்கு 134 எம்.பிக்களின் ஆதரவு கிட்டியது. சுமார் 29 ஆண்டுகளுக்கு பிறகு ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார். 

Visitors Stats
Flag Counter
Popular This Week
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய பின்னர் ? அரசியலமைப்பு கூறுவது இதுதான் !
2022-07-10 22:26:49 | Politics
வெப்பத்தால் திணறும் ஐரோப்பா : 1,000 க்கும் அதிகமானோர் பலி
2022-07-18 23:42:17 | Death
ஜனாதிபதிக்குரிய கொடியை கொண்டு சென்று படுக்கை விரிப்பாக பயன்படுத்தியவர் கைது : வீடியோ ஒன்றில் எரிக்கவுள்ளதாக தெரிவிப்பு
2022-07-29 21:43:51 | Arrest
இலங்கையில் 7 மாதங்களில் 6 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம்
2022-08-05 21:47:52 | General Issue
வடிவேல் சுரேஸ் MP மீதும் தாக்குதல் : வைத்தியசாலையில் அனுமதி
2022-07-10 22:29:40 | Politics
பாராளுமன்றம் கூடுகிறது ! இடைக்கால ஜனாதிபதி தெரிவிற்கான வேட்புமனு தாக்கல் இன்று ! நாளை இரகசிய வாக்கெடுப்பு ! களத்தில் ரணில், சஜித், அனுரகுமார, டளஸ்
2022-07-19 09:01:24 | Politics
அமரகீரத்தி எம்.பி. உள்ளிட்ட மூவர் கொலை : 8 சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்
2022-07-29 21:47:22 | Crime
கூரையை உடைத்து வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் மீட்பு
2022-08-05 21:52:47 | General Issue
லங்கா IOC நிறுவனத்துக்கு மூன்று எரிபொருள் கப்பல்கள் வருகின்றன : ஒவ்வொன்றும் தலா 30,000 மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் டீசலை தாங்கியவாறு வந்தடையவுள்ளது
2022-07-10 22:41:06 | General Issue
வாக்களிக்க வருவோருக்கு விசேட பாதுகாப்பு பாராளுமன்ற வீதிகள் முழுமையாக பூட்டு : ஊடகவியலாளர்களுக்கு விசேட அனுமதி : எம்.பிக்களுக்கான எரிபொருள் வழங்க திட்டம்
2022-07-19 09:19:13 | Politics