ஷம்ஸ் பாஹிம்
Education

ஓகஸ்ட் 01 முதல் 05 வரையான எதிர்வரும் வாரத்திலும் அனைத்து அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளும், திங்கள், செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் மாத்திரம் நடைபெறுமென, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை (01) முதல் பாடசாலைகளைத் திறப்பது தொடர்பாக இன்று (30) கல்வி அமைச்சில் இடம்பெற்ற கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சர், அமைச்சின் செயலாளர், கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன், ஒன்லைன் தொழில்நுட்பம் மூலம் மாகாணக் கல்விச் செயலாளர்கள் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களுக்கு அமைவாக, கடந்த ஜூலை 19ஆம் திகதி வெளியிடப்பட்ட ஊடக அறிக்கைக்கு அமைய இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அதற்கமைய, ஏற்கனவே கல்வி அமைச்சினால் மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதேசப் பொறுப்பாளர், பிரதி மற்றும் உதவிக் கல்வி பணிப்பாளர்கள், அனைத்து அதிபர்கள் ஆகியோருக்கு வழங்கிய பணிப்புரையின் பிரகாரம், ஏற்கனவே முந்தைய வாரங்களில் இடம்பெற்றதைப் போலவே  எதிர்வரும் ஓகஸ்ட் 01 முதல் 05 வரையிலான வாரமும் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை, திங்கள், செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், புதன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் மாணவர்கள் வீட்டிலிருந்து கற்றலில் ஈடுபடக்கூடிய செயற்பாடுகளைச் செய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக, அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், போக்குவரத்து சிரமங்கள் இல்லாத பாடசாலைகளில் அப்பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்மதத்துடனும் வலயக் கல்விப் பணிப்பாளரின் அனுமதியுடனும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடாத்தலாம் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

பாடசாலைகளில் உள்ள நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு ஆசிரியரும் குறைந்தபட்சம் 3 நாட்களுக்கு பாடசாலைக்கு வந்து கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் நெகிழ்வான அட்டவணையையும் தயாரிக்கலாமென அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்கு பாடசாலை சேவைக்காக ஒதுக்கப்பட்ட தனியார் பஸ்களை மாகாணப் போக்குவரத்து அதிகாரசபை பயன்படுத்துகிறது என்பதோடு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சாதாரண பஸ் கட்டணத்தை செலுத்தி அந்த பஸ்கள் மூலம் போக்குவரத்து வசதிகளை பெற முடியும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Visitors Stats
Flag Counter
Popular This Week
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய பின்னர் ? அரசியலமைப்பு கூறுவது இதுதான் !
2022-07-10 22:26:49 | Politics
வெப்பத்தால் திணறும் ஐரோப்பா : 1,000 க்கும் அதிகமானோர் பலி
2022-07-18 23:42:17 | Death
ஜனாதிபதிக்குரிய கொடியை கொண்டு சென்று படுக்கை விரிப்பாக பயன்படுத்தியவர் கைது : வீடியோ ஒன்றில் எரிக்கவுள்ளதாக தெரிவிப்பு
2022-07-29 21:43:51 | Arrest
இலங்கையில் 7 மாதங்களில் 6 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம்
2022-08-05 21:47:52 | General Issue
வடிவேல் சுரேஸ் MP மீதும் தாக்குதல் : வைத்தியசாலையில் அனுமதி
2022-07-10 22:29:40 | Politics
பாராளுமன்றம் கூடுகிறது ! இடைக்கால ஜனாதிபதி தெரிவிற்கான வேட்புமனு தாக்கல் இன்று ! நாளை இரகசிய வாக்கெடுப்பு ! களத்தில் ரணில், சஜித், அனுரகுமார, டளஸ்
2022-07-19 09:01:24 | Politics
அமரகீரத்தி எம்.பி. உள்ளிட்ட மூவர் கொலை : 8 சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்
2022-07-29 21:47:22 | Crime
கூரையை உடைத்து வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் மீட்பு
2022-08-05 21:52:47 | General Issue
லங்கா IOC நிறுவனத்துக்கு மூன்று எரிபொருள் கப்பல்கள் வருகின்றன : ஒவ்வொன்றும் தலா 30,000 மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் டீசலை தாங்கியவாறு வந்தடையவுள்ளது
2022-07-10 22:41:06 | General Issue
வாக்களிக்க வருவோருக்கு விசேட பாதுகாப்பு பாராளுமன்ற வீதிகள் முழுமையாக பூட்டு : ஊடகவியலாளர்களுக்கு விசேட அனுமதி : எம்.பிக்களுக்கான எரிபொருள் வழங்க திட்டம்
2022-07-19 09:19:13 | Politics