எம்.வை.எம். சியாம்
Education

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் பாடசாலைகளுக்கும் ஆகஸ்ட் மாதம் விடுமுறையின்றி பாடசாலை செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். மேலும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிக்கையில் இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தரம் 5 புலமைப் பரீட்சையில் மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளை கருத்தில் கொண்டு தொடர்ச்சியான கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளும் நாளை முதல் தொடர்ச்சியாக கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். அதன்படி ஆகஸ்ட் மாதம் விடுமுறையின்றி பாடசாலை செயற்பாடுகள் நவம்பர் மாதம் இறுதி வரை தொடர்ச்சியாக நடைபெறும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு பரீட்சைகள் பிற்போடப்பட்டு இருந்தது. அதிகளவிலான பரீட்சைகள் நிலுவையில் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு நடத்துவதற்கு கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நவம்பர் மாதம் 27 ஆம் திகதி நடைபெறவுள்ளது. மேலும் க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 28 ஆம் திகதி முதல் நடைபெற உள்ளது. இந்நிலையில் க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 28 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை நடத்தப்பட உள்ளது.

மேலும் தரம் 1 மற்றும் 2 வகுப்புகளில் கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாது 3 தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான  தேவைகளை கண்டறிவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் செயற்பாடுகள் குறித்து கல்வி அமைச்சினால் ஆராயப்படுகிறது.

இந்நிலையில், அதிபர் தரம் மூன்றிற்கு புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கை அதிபர் சேவையின் மட்டுப்படுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் அடிப்படை சம புள்ளிகளைப் பெற்ற 155 அதிகாரிகளுக்கு இலங்கை அதிபர் சேவையின் தரம் 111 தொடர்பான புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்களுக்கு பிரதான பாடங்கள் 24 உள்ளடக்கிய வகையில் பல்கலைக்கழகங்கள் மூலம் பயிற்சி பாடநெறிகள் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு நிலையினால் மட்டுப்படுத்தப்பட்ட பொது போக்குவரத்து காரணமாக பாடசாலை மாணவர்களுக்கு மாத்திரம் தனியார் பொது போக்குவரத்து  பஸ்கள் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் பாடசாலை பொது போக்குவரத்து பஸ்கள் சேவையில் ஈடுபடும் என்றும் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Visitors Stats
Flag Counter
Popular This Week
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய பின்னர் ? அரசியலமைப்பு கூறுவது இதுதான் !
2022-07-10 22:26:49 | Politics
வெப்பத்தால் திணறும் ஐரோப்பா : 1,000 க்கும் அதிகமானோர் பலி
2022-07-18 23:42:17 | Death
ஜனாதிபதிக்குரிய கொடியை கொண்டு சென்று படுக்கை விரிப்பாக பயன்படுத்தியவர் கைது : வீடியோ ஒன்றில் எரிக்கவுள்ளதாக தெரிவிப்பு
2022-07-29 21:43:51 | Arrest
இலங்கையில் 7 மாதங்களில் 6 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம்
2022-08-05 21:47:52 | General Issue
வடிவேல் சுரேஸ் MP மீதும் தாக்குதல் : வைத்தியசாலையில் அனுமதி
2022-07-10 22:29:40 | Politics
பாராளுமன்றம் கூடுகிறது ! இடைக்கால ஜனாதிபதி தெரிவிற்கான வேட்புமனு தாக்கல் இன்று ! நாளை இரகசிய வாக்கெடுப்பு ! களத்தில் ரணில், சஜித், அனுரகுமார, டளஸ்
2022-07-19 09:01:24 | Politics
அமரகீரத்தி எம்.பி. உள்ளிட்ட மூவர் கொலை : 8 சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்
2022-07-29 21:47:22 | Crime
கூரையை உடைத்து வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் மீட்பு
2022-08-05 21:52:47 | General Issue
லங்கா IOC நிறுவனத்துக்கு மூன்று எரிபொருள் கப்பல்கள் வருகின்றன : ஒவ்வொன்றும் தலா 30,000 மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் டீசலை தாங்கியவாறு வந்தடையவுள்ளது
2022-07-10 22:41:06 | General Issue
வாக்களிக்க வருவோருக்கு விசேட பாதுகாப்பு பாராளுமன்ற வீதிகள் முழுமையாக பூட்டு : ஊடகவியலாளர்களுக்கு விசேட அனுமதி : எம்.பிக்களுக்கான எரிபொருள் வழங்க திட்டம்
2022-07-19 09:19:13 | Politics