எம். மனோசித்ரா
Education

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் 15 - 30 ஆம் திகதிக்கு இடையில் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகவும், எனவே இம்மாத இறுதிக்குள் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தார உயர்தரப் பரீட்சைகள் கடந்த பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் 5 ஆம் திகதி வரை இடம்பெற்றன. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டிய உயர்தரப் பரீட்சைகள் கொவிட் தொற்று மற்றும் நாட்டில் காணப்படும் ஏனைய நெருக்கடிகளால் கடந்த பெப்ரவரி மாதத்திலேயே நடத்தப்பட்டன.

இம்முறை பாடசாலை ஊடாக 2 இலட்சத்து 79 ஆயிரத்து 142 பரீட்சாதிகளும் , 66 101 தனியார் பரீட்சாத்திகளும் , ஒட்டுமொத்தமாக 3 இலட்சத்து 45 ஆயிரத்து 242 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றினர்.

 பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் வினாத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும், நாட்டில் நிலவிய எரிபொருள் நெருக்கடிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களினால் அவற்றை நிறைவு செய்வதில் அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.

எவ்வாறிருப்பினும் தற்போது வினாத்தாள் திருத்தும் பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாகவும், எனவே மேலும் தாமதிக்காது இம்மாத இறுதிக்குள் பெறுபேறுகள் வெளியிடப்படும் என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Visitors Stats
Flag Counter
Popular This Week
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய பின்னர் ? அரசியலமைப்பு கூறுவது இதுதான் !
2022-07-10 22:26:49 | Politics
வெப்பத்தால் திணறும் ஐரோப்பா : 1,000 க்கும் அதிகமானோர் பலி
2022-07-18 23:42:17 | Death
ஜனாதிபதிக்குரிய கொடியை கொண்டு சென்று படுக்கை விரிப்பாக பயன்படுத்தியவர் கைது : வீடியோ ஒன்றில் எரிக்கவுள்ளதாக தெரிவிப்பு
2022-07-29 21:43:51 | Arrest
இலங்கையில் 7 மாதங்களில் 6 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம்
2022-08-05 21:47:52 | General Issue
வடிவேல் சுரேஸ் MP மீதும் தாக்குதல் : வைத்தியசாலையில் அனுமதி
2022-07-10 22:29:40 | Politics
பாராளுமன்றம் கூடுகிறது ! இடைக்கால ஜனாதிபதி தெரிவிற்கான வேட்புமனு தாக்கல் இன்று ! நாளை இரகசிய வாக்கெடுப்பு ! களத்தில் ரணில், சஜித், அனுரகுமார, டளஸ்
2022-07-19 09:01:24 | Politics
அமரகீரத்தி எம்.பி. உள்ளிட்ட மூவர் கொலை : 8 சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்
2022-07-29 21:47:22 | Crime
கூரையை உடைத்து வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் மீட்பு
2022-08-05 21:52:47 | General Issue
லங்கா IOC நிறுவனத்துக்கு மூன்று எரிபொருள் கப்பல்கள் வருகின்றன : ஒவ்வொன்றும் தலா 30,000 மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் டீசலை தாங்கியவாறு வந்தடையவுள்ளது
2022-07-10 22:41:06 | General Issue
வாக்களிக்க வருவோருக்கு விசேட பாதுகாப்பு பாராளுமன்ற வீதிகள் முழுமையாக பூட்டு : ஊடகவியலாளர்களுக்கு விசேட அனுமதி : எம்.பிக்களுக்கான எரிபொருள் வழங்க திட்டம்
2022-07-19 09:19:13 | Politics