இங்கிலாந்தின் பேர்மிங்ஹம் நகரில் இடம்பெற்று வரும் 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் 100 மீற்றர் ஓட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கை தடகள வீரர் யுபுன் அபேகோன் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
ஆசியாவின் மிக வேகமான வீரராக தனது பெயரை பதித்துள்ள அவர் போட்டித் தூரத்தை 10.14 செக்கன்களில் கடந்து அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
அந்த வகையில் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கை வீரர் எனும் சாதனையையும் அவர் நிலைநாட்டியுள்ளார்.
இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்ற தென்னாபிரிக்க வீரர் Akani Simbine 10.13 செக்கன்களில் இத்தூரத்தை கடந்தார்.
அந்த வகையில் யுபுன் அபேகோன் 0.01 செக்கனில் (செக்கனின் நூறில் ஒன்று) வெள்ளிப் பதக்கத்தை தவறவிட்டுள்ளார்.
தங்கப் பதக்கம் வென்ற கென்ய வீரர் Ferdinand Omanyala 10.02 செக்கன்களில் இத்தூரத்தை கடந்தார்.
பாலித பண்டாரவுக்கு வெள்ளிப் பதக்கம்
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவருக்கான வட்டு எறிதல் (மாற்றுத்திறன்) பரா தட கள விளையாட்டு போட்டியில் இலங்கை வீரர் பாலித பண்டார இரண்டாமிடத்தை பெற்று வௌ்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
அவர் இதில் 944 புள்ளிகளை பெற்றதன் மூலம் இச்சாதனையை நிலைநாட்டியுள்ளார். இதில் அவர் உச்சபட்சமாக 44.20 மீற்றர் தூரத்திற்கு தட்டை எறிந்து இப்பதக்கத்தை வெற்றி பெற்றுள்ளார். இது அவரது தனிப்பட்ட சாதனையாகும்.
முதலாவது மற்றும் 3ஆவது இடங்களைப் பெற்ற வேல்ஸ் நாட்டுக்கு தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. முறையே 1072 மற்றும் 915 புள்ளிகளைப் பெற்று இப்பதக்கங்களை அந்நாடு வெற்றி கொண்டுள்ளது.
© 2022 Ceylon Media Forum. All rights reserved | Solution by Syntaks