ABC NEWS
General Issue

பாகிஸ்தான் ஆதன விற்பனைத் துறைக்காக அரசு அளித்துள்ள நிதியை நிராகரித்துள்ள ஆதன நிறுவனங்கள், இத்துறையின் மீது அரசு விதித்துள்ள கடுமையான வரிச் சுமையை குறைக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இவ்வருடத்துக்கான ஆதனங்களின் மீதான வரிகளை அரசு இரட்டிப்பாக்கியுள்ளது. இவ்வரி விதிப்பான ஆதன நிறுவனங்களை நடத்திச் செல்ல முடியாத நிலையை தோற்றுவித்துள்ளது. இதனால் இத்துறை சார்ந்த பலர் தொழில் இழக்க நேரிடும். பாகிஸ்தான் மத்திய அரசு கொஞ்சமும் கருணையற்ற வரிகளை அறவிட்டு வருகிறது என்று ஆதன வர்த்தக சம்மேளனம் தெரிவித்திருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானின் ஆதன விற்பனை வர்த்தகத்துறை முக்கியமான ஒரு துறை என்றும் பெருமளவிலான வெளிநாட்டு நிதியை கொண்டுவரக் கூடியது என்றும் சுட்டிக்காட்டியுள்ள இச்சம்மேளனம், கடுமையான வரி விதிப்பானது இவ்வர்த்தகத்தை நிலை குலையச் செய்திருப்பதாக கூறியுள்ளது.

பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்து வருகிறது. அதன் தற்போதைய நிதிப் பற்றாக்குறை 17.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்படுகிறது. 

உலக அளவில் பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலைகள் அதிகரித்து காணப்படுவதால் பாகிஸ்தானின் இறக்குமதிக்கான செலவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதேசமயம் இரு தரப்பு மற்றும் பன்னாட்டு உடன்படிக்கைகள் வாயிலாக வெளிநாட்டு பண வரவு குறைந்துள்ள நிலையில் நிதி நெருக்கடி கடந்த சில மாதங்களாக மோசமடைந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Visitors Stats
Flag Counter
Popular This Week
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய பின்னர் ? அரசியலமைப்பு கூறுவது இதுதான் !
2022-07-10 22:26:49 | Politics
வெப்பத்தால் திணறும் ஐரோப்பா : 1,000 க்கும் அதிகமானோர் பலி
2022-07-18 23:42:17 | Death
ஜனாதிபதிக்குரிய கொடியை கொண்டு சென்று படுக்கை விரிப்பாக பயன்படுத்தியவர் கைது : வீடியோ ஒன்றில் எரிக்கவுள்ளதாக தெரிவிப்பு
2022-07-29 21:43:51 | Arrest
இலங்கையில் 7 மாதங்களில் 6 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம்
2022-08-05 21:47:52 | General Issue
வடிவேல் சுரேஸ் MP மீதும் தாக்குதல் : வைத்தியசாலையில் அனுமதி
2022-07-10 22:29:40 | Politics
பாராளுமன்றம் கூடுகிறது ! இடைக்கால ஜனாதிபதி தெரிவிற்கான வேட்புமனு தாக்கல் இன்று ! நாளை இரகசிய வாக்கெடுப்பு ! களத்தில் ரணில், சஜித், அனுரகுமார, டளஸ்
2022-07-19 09:01:24 | Politics
அமரகீரத்தி எம்.பி. உள்ளிட்ட மூவர் கொலை : 8 சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்
2022-07-29 21:47:22 | Crime
கூரையை உடைத்து வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் மீட்பு
2022-08-05 21:52:47 | General Issue
லங்கா IOC நிறுவனத்துக்கு மூன்று எரிபொருள் கப்பல்கள் வருகின்றன : ஒவ்வொன்றும் தலா 30,000 மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் டீசலை தாங்கியவாறு வந்தடையவுள்ளது
2022-07-10 22:41:06 | General Issue
வாக்களிக்க வருவோருக்கு விசேட பாதுகாப்பு பாராளுமன்ற வீதிகள் முழுமையாக பூட்டு : ஊடகவியலாளர்களுக்கு விசேட அனுமதி : எம்.பிக்களுக்கான எரிபொருள் வழங்க திட்டம்
2022-07-19 09:19:13 | Politics