இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக கொழும்பில் இன்று (04) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் குறித்த போராட்டம் இன்று வியாழக்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது.
கடந்த மே 9 ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டமைக்காக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நேற்றையதினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று கொழும்பு கோட்டையில் தொழிற்சங்கங்கள் இணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
© 2022 Ceylon Media Forum. All rights reserved | Solution by Syntaks