இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினுக்கு ஓகஸ்ட் 12ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் திலிண கமகேவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவருக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டது.
இதன்போது ஜோசப் ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவிக்குமுகமாக குறித்த பகுதியில் தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் கூடியிருந்தனர்.
கடந்த மே 28ஆம் திகதி இலங்கை வங்கி மாவத்தையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நேற்று (03) பிற்பகல் அச்சங்கத்தின் தலைமையகத்தில் வைத்து கொழும்பு கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2022 Ceylon Media Forum. All rights reserved | Solution by Syntaks