நா.தனுஜா
Humanitarian Crises

கொழும்பு, 'கோட்டா கோ கம' ஆர்ப்பாட்டப் பகுதியிலிருந்து போராட்டக்காரர்களை வெளியேறுமாறு பொலிஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பு தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் சர்வதேச மன்னிப்புச் சபை, போராட்டக்காரர்கள் மற்றும் போராட்ட ஒருங்கிணைப்பாளர்களின் தொடர்ச்சியான கைதுகள் மூலம் அரசாங்கத்திற்கு எதிரான குரல்களை அடக்குவதற்கு மேற்கொள்ளப்படும் தொடர் முயற்சிகள் மிகுந்த எச்சரிக்கையைத் தோற்றுவித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் சர்வதேச மன்னிப்புச் சபை மேலும் கூறியிருப்பதாவது, பொது இடங்களில் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கு மக்கள் கொண்டிருக்கும் உரிமைக்கு இலங்கை அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும் என்பதுடன் அமைதிவழிப் போராட்டக்காரர்களைக் கலைப்பதற்கு அடக்குமுறை உத்திகளையோ அல்லது படையினரையோ பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

குறிப்பாக பொருளாதார நெருக்கடி தொடர்பில் பொறுப்புக்கூறுவதுடன் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து 100 நாட்களுக்கும் அதிகமான காலம் அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த கொழும்பு, 'கோட்டா கோ கம' ஆர்ப்பாட்டப் பகுதியிலிருந்து போராட்டக்காரர்களை வெளியேறுமாறு பொலிஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பு தொடர்பில் நாம் கரிசனை கொண்டிருக்கின்றோம்.

அதுமாத்திரமன்றி போராட்டக்காரர்கள் மற்றும் போராட்ட ஒருங்கிணைப்பாளர்களின் தொடர்ச்சியான கைதுகள் மூலம் அரசாங்கத்திற்கு எதிரான குரல்களை அடக்குவதற்கு மேற்கொள்ளப்படும் தீவிரமான தொடர் முயற்சிகள் மிகுந்த எச்சரிக்கையைத் தோற்றுவித்துள்ளன.

எனவே உரிமைகள் மீது மட்டுப்பாடுகளைப் பிரயோகிக்க வேண்டிய அவசியத்தேவை எதுவும் இல்லாத நிலையில், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான தமது உரிமையைப் பயன்படுத்தியமைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் போராட்டக்காரர்கள் அனைவரையும் விடுவிப்பதுடன் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முழுமையாக நீக்கிக் கொள்ளுமாறு உரிய அதிகாரிகளிடம் வலியுறுத்துகின்றோம்.

மாறாகக் குற்றமிழைத்தமைக்கான ஆதாரம் காணப்படும் பட்சத்தில், அக்குற்றத்தின் தன்மை குறித்து உரியவாறு மதிப்பீடு செய்ததன் பின்னர் சர்வதேச நியமங்களுக்கும் உரிய சட்டங்களுக்கும் அமைவாக வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும்.

இலங்கை அரசாங்கம் கருத்து வெளிப்பாடு மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுதல் ஆகியவற்றுக்கான சுதந்திரத்திற்கு மதிப்பளிப்பதுடன் அவற்றைப் பாதுகாப்பது இன்றியமையாததாகும். மாறாக இந்த உரிமைகளின் மீதான எந்தவொரு மட்டுப்பாடும் அத்தியாவசியமானதாகும் பொருத்தமானதாகவும் சட்டத்திற்கு அமைவானதாகவும் காணப்பட வேண்டியது அவசியம் என்று சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது. 

Visitors Stats
Flag Counter
Popular This Week
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய பின்னர் ? அரசியலமைப்பு கூறுவது இதுதான் !
2022-07-10 22:26:49 | Politics
வெப்பத்தால் திணறும் ஐரோப்பா : 1,000 க்கும் அதிகமானோர் பலி
2022-07-18 23:42:17 | Death
ஜனாதிபதிக்குரிய கொடியை கொண்டு சென்று படுக்கை விரிப்பாக பயன்படுத்தியவர் கைது : வீடியோ ஒன்றில் எரிக்கவுள்ளதாக தெரிவிப்பு
2022-07-29 21:43:51 | Arrest
இலங்கையில் 7 மாதங்களில் 6 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம்
2022-08-05 21:47:52 | General Issue
வடிவேல் சுரேஸ் MP மீதும் தாக்குதல் : வைத்தியசாலையில் அனுமதி
2022-07-10 22:29:40 | Politics
பாராளுமன்றம் கூடுகிறது ! இடைக்கால ஜனாதிபதி தெரிவிற்கான வேட்புமனு தாக்கல் இன்று ! நாளை இரகசிய வாக்கெடுப்பு ! களத்தில் ரணில், சஜித், அனுரகுமார, டளஸ்
2022-07-19 09:01:24 | Politics
அமரகீரத்தி எம்.பி. உள்ளிட்ட மூவர் கொலை : 8 சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்
2022-07-29 21:47:22 | Crime
கூரையை உடைத்து வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் மீட்பு
2022-08-05 21:52:47 | General Issue
லங்கா IOC நிறுவனத்துக்கு மூன்று எரிபொருள் கப்பல்கள் வருகின்றன : ஒவ்வொன்றும் தலா 30,000 மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் டீசலை தாங்கியவாறு வந்தடையவுள்ளது
2022-07-10 22:41:06 | General Issue
வாக்களிக்க வருவோருக்கு விசேட பாதுகாப்பு பாராளுமன்ற வீதிகள் முழுமையாக பூட்டு : ஊடகவியலாளர்களுக்கு விசேட அனுமதி : எம்.பிக்களுக்கான எரிபொருள் வழங்க திட்டம்
2022-07-19 09:19:13 | Politics