இராஜதுரை ஹஷான்
Politics

நிலையான பொருளாதாரக் கொள்கையொன்றை அமுல்படுத்துவதன் மூலம் நாட்டின் நெருக்கடியான பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்கு பலமான அரசாங்கம் அவசியமானது எனவும், அதற்கு சர்வ கட்சி ஆட்சி மிகவும் முக்கியமானது எனவும் இலங்கை அமரபுர மகா நிகாயவின் அதியுயர் மகா தலைவர் அக்கமஹா பண்டித வண. தொடம்பஹல சந்தசிறி தேரர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நேற்று வியாழக்கிழமை மாலை தேரரை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நேற்று (04) பிற்பகல் இராஜகிரிய, கலபலுவாவ, கோதம தபோவன விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமரபுர மகா நிகாயவின் மகாதலைவர் வண.தொடம்பஹல சந்தசிறி தேரர் அவர்களைச் சந்தித்து ஆசி பெற்றார்.

விகாரைக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களை நிர்வாக சபையின் தலைவர் அஜித டி சொய்சா உட்பட சபை உறுப்பினர்கள் வரவேற்றனர். பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மதவழிபாடுகளில் ஈடுபட்டார்.

மகாநாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட பின்னர், தாது மன்றத்திற்குச் சென்று அங்கு சமய கிரியைகளை மேற்கொண்ட பின்  மகா சங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசிர்வாதம் வழங்கினர்.

விவசாயத்திற்கு முன்னுரிமை அளித்து நாட்டை தன்னிறைவு அடையச் செய்ய தேவையான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்று கூறிய தேரர் அவர்கள், திறமையின் அடிப்படையில் வேலை வாய்ப்புகளை இலக்காகக் கொண்ட தேசிய கல்விக் கொள்கையொன்றை உருவாக்குதல்  மற்றும் எதிர்கால உலகை வெல்லக்கூடிய பொருத்தமான பாடங்களை பாடசாலை பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் இலங்கை அமரபுர மகா நிகாயவின் பதிவாளர் கலாநிதி வண.பல்லேகந்த ரத்தனசார தேரர் மற்றும் அந்த நிகாயவை பிரதிநிதித்துவப்படுத்தும் சங்க சபைகளின் தேரர்கள், நிர்வாக சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Visitors Stats
Flag Counter
Popular This Week
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய பின்னர் ? அரசியலமைப்பு கூறுவது இதுதான் !
2022-07-10 22:26:49 | Politics
வெப்பத்தால் திணறும் ஐரோப்பா : 1,000 க்கும் அதிகமானோர் பலி
2022-07-18 23:42:17 | Death
ஜனாதிபதிக்குரிய கொடியை கொண்டு சென்று படுக்கை விரிப்பாக பயன்படுத்தியவர் கைது : வீடியோ ஒன்றில் எரிக்கவுள்ளதாக தெரிவிப்பு
2022-07-29 21:43:51 | Arrest
இலங்கையில் 7 மாதங்களில் 6 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம்
2022-08-05 21:47:52 | General Issue
வடிவேல் சுரேஸ் MP மீதும் தாக்குதல் : வைத்தியசாலையில் அனுமதி
2022-07-10 22:29:40 | Politics
பாராளுமன்றம் கூடுகிறது ! இடைக்கால ஜனாதிபதி தெரிவிற்கான வேட்புமனு தாக்கல் இன்று ! நாளை இரகசிய வாக்கெடுப்பு ! களத்தில் ரணில், சஜித், அனுரகுமார, டளஸ்
2022-07-19 09:01:24 | Politics
அமரகீரத்தி எம்.பி. உள்ளிட்ட மூவர் கொலை : 8 சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்
2022-07-29 21:47:22 | Crime
கூரையை உடைத்து வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் மீட்பு
2022-08-05 21:52:47 | General Issue
லங்கா IOC நிறுவனத்துக்கு மூன்று எரிபொருள் கப்பல்கள் வருகின்றன : ஒவ்வொன்றும் தலா 30,000 மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் டீசலை தாங்கியவாறு வந்தடையவுள்ளது
2022-07-10 22:41:06 | General Issue
வாக்களிக்க வருவோருக்கு விசேட பாதுகாப்பு பாராளுமன்ற வீதிகள் முழுமையாக பூட்டு : ஊடகவியலாளர்களுக்கு விசேட அனுமதி : எம்.பிக்களுக்கான எரிபொருள் வழங்க திட்டம்
2022-07-19 09:19:13 | Politics