வவுனியா, வீரபுரம், சின்னத்தன்பனை பகுதியில் இரு தரப்பினருக்கு ஏற்பட்ட மோதலில் இளைஞன் ஒருவர் காதை கடித்து குதறியமையினால் படுகாயமடைந்த நபர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
04 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் குறித்த பகுதியிலுள்ள வீதியில் சென்ற சமயத்தில் இரு தரப்பினருக்குமிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
வாய்தர்க்கம் மோதலாக மாறியதில் வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதில் ஓர் இளைஞன் மோதலில் ஈடுபட்ட நபர் ஒருவரின் காதை கடித்து துண்டாக்கியுள்ளார்.
தலையில் வாள் வெட்டு காயம் மற்றும் காது துண்டாக்கப்பட்ட நிலையில் 45 வயதுடைய நபரொருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
© 2022 Ceylon Media Forum. All rights reserved | Solution by Syntaks