இராஜதுரை ஹஷான்
Politics

பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றினைத்து சர்வ கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நான்கு பிரதான கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

சர்வ கட்சி அரசாங்கத்தை ஸ்தாபித்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெருமவின் தரப்பினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று  இடம்பெற்றது.

சர்வ கட்சி அரசாங்கத்தின் வியூகம், இடைக்கால அரசாங்கத்தின் காலவரையறை தொடர்பில் இச்சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக தீவிரமடைந்து அது சமூக பிரச்சினையாக தோற்றம் பெற்று அரசியல் கட்டமைப்பில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்த பேராசிரியர் ஜி.எல் பீரிஸ், சர்வ கட்சி அரசாங்கத்தை சிறந்த  முறையில் ஸ்தாபிப்பதற்கு தமது அணியினர் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயார் எனவும், சர்வ கட்சி அரசாங்கத்தில் சகல அரசியல் கட்சிகளும் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்பதை தாம் வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

சர்வ கட்சி அரசாங்கத்திற்கு தாம் ஒத்துழைப்பை வழங்க தீர்மானித்துள்ளதுடன், இணக்கப்பாட்டுடன் செயற்படுவதற்கு நான்கு பிரதான நிபந்தனைகளை முன்வைப்பதாகவும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி மிக மோசமான நிலையை அடைந்துள்ளதை சகல தரப்பினரும் விளங்கிக் கொள்ள வேண்டும். அமைச்சரவை அமைச்சுக்கள் மட்டுப்படுத்தப்படுவதுடன் இராஜாங்க அமைச்சு மற்றும் பிரதி அமைச்சுக்களின் நியமனம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட வேண்டும்.

சர்வ கட்சி அரசாங்கத்தில் ஒரு குழுவாக தாம் எவ்வித அமைச்சுப் பதவிகளையும் பெற்றுக் கொள்ளப் போவதில்லை இருப்பினும் சர்வ கட்சி அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குவோம்.

பாராளுமன்ற உப குழுக்களில் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளோம். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் சகல தரப்பினரது ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்வது அவசியமாகும்.

கொவிட் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பில் இருந்து மீள்வதற்கான திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற நான்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Visitors Stats
Flag Counter
Popular This Week
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய பின்னர் ? அரசியலமைப்பு கூறுவது இதுதான் !
2022-07-10 22:26:49 | Politics
வெப்பத்தால் திணறும் ஐரோப்பா : 1,000 க்கும் அதிகமானோர் பலி
2022-07-18 23:42:17 | Death
ஜனாதிபதிக்குரிய கொடியை கொண்டு சென்று படுக்கை விரிப்பாக பயன்படுத்தியவர் கைது : வீடியோ ஒன்றில் எரிக்கவுள்ளதாக தெரிவிப்பு
2022-07-29 21:43:51 | Arrest
இலங்கையில் 7 மாதங்களில் 6 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம்
2022-08-05 21:47:52 | General Issue
வடிவேல் சுரேஸ் MP மீதும் தாக்குதல் : வைத்தியசாலையில் அனுமதி
2022-07-10 22:29:40 | Politics
பாராளுமன்றம் கூடுகிறது ! இடைக்கால ஜனாதிபதி தெரிவிற்கான வேட்புமனு தாக்கல் இன்று ! நாளை இரகசிய வாக்கெடுப்பு ! களத்தில் ரணில், சஜித், அனுரகுமார, டளஸ்
2022-07-19 09:01:24 | Politics
அமரகீரத்தி எம்.பி. உள்ளிட்ட மூவர் கொலை : 8 சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்
2022-07-29 21:47:22 | Crime
கூரையை உடைத்து வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் மீட்பு
2022-08-05 21:52:47 | General Issue
லங்கா IOC நிறுவனத்துக்கு மூன்று எரிபொருள் கப்பல்கள் வருகின்றன : ஒவ்வொன்றும் தலா 30,000 மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் டீசலை தாங்கியவாறு வந்தடையவுள்ளது
2022-07-10 22:41:06 | General Issue
வாக்களிக்க வருவோருக்கு விசேட பாதுகாப்பு பாராளுமன்ற வீதிகள் முழுமையாக பூட்டு : ஊடகவியலாளர்களுக்கு விசேட அனுமதி : எம்.பிக்களுக்கான எரிபொருள் வழங்க திட்டம்
2022-07-19 09:19:13 | Politics