எம்.ஆர். எம்.வசீம்
Health

நாட்டில் தற்பொழுது மீண்டும் பரவ ஆரம்பித்துள்ள கொரோனா தொற்று நோயானது மன்னாரிலும் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளதால் பூஸ்டர் தடுப்பூசி இதுவரைக்கும் போடாதவர்கள் தடுப்பூசியை போடுவதன் மூலம் நோயால் ஏற்படும் அனர்த்தங்களிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என மன்னார் மாவட்ட தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு வைத்திய கலாநிதி கதிர்காமநாதன் சுதாகர் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு வைத்திய கலாநிதி கதிர்காமநாதன் சுதாகரிடம் கொரோனா தொற்று பரவல் தொடர்பில் வினவியபோதே அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில் தற்பொழுது இம்மாதத் தொடக்கத்திலிருந்து நாளாந்தம் சுமார் பத்து கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டு வருகின்றனர்.

இனம் காணப்படும் தொற்றாளர்கள் மன்னார் மாவட்டத்தில் ஒரு இடம் என்று அல்லாது மன்னார் மாவட்டத்தில் பரவலாகவே இனம் காணப்பட்டு வருகின்றனர்.

ஏற்கனவே இத்தொற்றாளர்கள் மன்னாரில் நானாட்டான், முசலி பிரதேச பிரிவுகளில் அதிகமாக அடையாளம் காணப்பட்டு வந்தபோதும் தற்பொழுது இத்தொற்றாளர்கள் மன்னாரில் பரவலாக அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் காணப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

ஆகவே ஏற்கனவே இத்தொற்று நோயிலிருந்து விடுபடும் நோக்குடன் பூஸ்டர் மருந்து ஏற்றாதவர்கள் தற்பொழுது பூஸ்டர் ஊசியை போட்டுக் கொள்ளும்படி யாவருக்கும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றது எனவும், தற்பொழுது உருவாகியிருக்கும் தொற்று நோயால் பெரும்பாலும் மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாக காணப்படுகின்றபோதும் நோயின் வேகத்தை குறைப்பதற்காகவே பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளும்படி வேண்டப்பட்டுள்ளனர்.

தடுப்பூசியானது மன்னார் மாவட்டத்தில் சகல சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் ஒவ்வொரு சனிக்கிழமைகளில் வழங்கப்படுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக அந்தந்த பகுதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் கேட்டு அறிந்து கொள்ளும்படியும் பொதுமக்கள் வேண்டப்பட்டுள்ளனர்.

அத்துடன் பொது இடங்களில் ஒன்றுகூடும்போதும் பிரயாணங்கள் செய்யும்போதும் கட்டாயம் ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு வைத்திய கலாநிதி கதிர்காமநாதன் சுதாகர் இவ்வாறு மேலும் தெரிவித்தார்.

Visitors Stats
Flag Counter
Popular This Week
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய பின்னர் ? அரசியலமைப்பு கூறுவது இதுதான் !
2022-07-10 22:26:49 | Politics
வெப்பத்தால் திணறும் ஐரோப்பா : 1,000 க்கும் அதிகமானோர் பலி
2022-07-18 23:42:17 | Death
ஜனாதிபதிக்குரிய கொடியை கொண்டு சென்று படுக்கை விரிப்பாக பயன்படுத்தியவர் கைது : வீடியோ ஒன்றில் எரிக்கவுள்ளதாக தெரிவிப்பு
2022-07-29 21:43:51 | Arrest
இலங்கையில் 7 மாதங்களில் 6 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம்
2022-08-05 21:47:52 | General Issue
வடிவேல் சுரேஸ் MP மீதும் தாக்குதல் : வைத்தியசாலையில் அனுமதி
2022-07-10 22:29:40 | Politics
பாராளுமன்றம் கூடுகிறது ! இடைக்கால ஜனாதிபதி தெரிவிற்கான வேட்புமனு தாக்கல் இன்று ! நாளை இரகசிய வாக்கெடுப்பு ! களத்தில் ரணில், சஜித், அனுரகுமார, டளஸ்
2022-07-19 09:01:24 | Politics
அமரகீரத்தி எம்.பி. உள்ளிட்ட மூவர் கொலை : 8 சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்
2022-07-29 21:47:22 | Crime
கூரையை உடைத்து வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் மீட்பு
2022-08-05 21:52:47 | General Issue
லங்கா IOC நிறுவனத்துக்கு மூன்று எரிபொருள் கப்பல்கள் வருகின்றன : ஒவ்வொன்றும் தலா 30,000 மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் டீசலை தாங்கியவாறு வந்தடையவுள்ளது
2022-07-10 22:41:06 | General Issue
வாக்களிக்க வருவோருக்கு விசேட பாதுகாப்பு பாராளுமன்ற வீதிகள் முழுமையாக பூட்டு : ஊடகவியலாளர்களுக்கு விசேட அனுமதி : எம்.பிக்களுக்கான எரிபொருள் வழங்க திட்டம்
2022-07-19 09:19:13 | Politics