எம்.ஆர். எம்.வசீம்
Government

பாராளுமன்ற கூட்டத் தொடர் முடிவுறுத்தப்பட்டதனால் செயலிழக்கப்பட்ட அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) மற்றும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா) உட்பட அனைத்து குழுக்களையும் நியமிக்கும் நடவடிக்கை அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

அதன் பிரகாரம் பாராளுமன்றத்தில் குழுக்களை நிறுவும் பிரதான குழுவான பாராளுமன்ற தெரிவுக்குழு எதிர்வரும் 9ஆம் திகதி நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, பாராளுமன்ற குழுக்களுக்கு அந்ததந்த கட்சிகள் மூலம் முன்னிலைப்படுத்தப்படும் உறுப்பினர்கள் தொடர்பில் அடுத்தவாரம் பேட்புமனு கோரப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

பாராளுமன்ற கூட்டத் தொடர் ஜனாதிபதியினால் முடிவுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு சில குழுக்கள் தவிர்ந்த 50 க்கும் மேற்பட்ட பாராளுமன்ற குழுக்கள் செயலிழக்கப்பட்டன. பாராளுமன்ற கூட்டத் தொடர் முடிவுறுத்தப்பட்டதன் மூலம் செயலிழக்கப்படாத குழுக்களான, உயர் பதவிகள் தொடர்பான குழு, துறைசார் மேற்பார்வைக் குழு மற்றும் பாராளுமன்ற விசேட குழு ஆகியவையாகும்.

அத்துடன் செயற்குழுக்கள் செயலிழந்தாலும் அவைகளினால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் வேறு நடவடிக்கைகளை அதில் இருந்து தொடர்ந்து முன்னெடுக்க முடியும் என்றே பாராளுமன்ற அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டி இருந்தார்.

அத்துடன் பாராளுமன்ற கூட்டத் தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த மாதம் 28ஆம் திகதி விசேட வர்த்தமானி மூலம் முடிவுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Visitors Stats
Flag Counter
Popular This Week
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய பின்னர் ? அரசியலமைப்பு கூறுவது இதுதான் !
2022-07-10 22:26:49 | Politics
வெப்பத்தால் திணறும் ஐரோப்பா : 1,000 க்கும் அதிகமானோர் பலி
2022-07-18 23:42:17 | Death
ஜனாதிபதிக்குரிய கொடியை கொண்டு சென்று படுக்கை விரிப்பாக பயன்படுத்தியவர் கைது : வீடியோ ஒன்றில் எரிக்கவுள்ளதாக தெரிவிப்பு
2022-07-29 21:43:51 | Arrest
இலங்கையில் 7 மாதங்களில் 6 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம்
2022-08-05 21:47:52 | General Issue
வடிவேல் சுரேஸ் MP மீதும் தாக்குதல் : வைத்தியசாலையில் அனுமதி
2022-07-10 22:29:40 | Politics
பாராளுமன்றம் கூடுகிறது ! இடைக்கால ஜனாதிபதி தெரிவிற்கான வேட்புமனு தாக்கல் இன்று ! நாளை இரகசிய வாக்கெடுப்பு ! களத்தில் ரணில், சஜித், அனுரகுமார, டளஸ்
2022-07-19 09:01:24 | Politics
அமரகீரத்தி எம்.பி. உள்ளிட்ட மூவர் கொலை : 8 சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்
2022-07-29 21:47:22 | Crime
கூரையை உடைத்து வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் மீட்பு
2022-08-05 21:52:47 | General Issue
லங்கா IOC நிறுவனத்துக்கு மூன்று எரிபொருள் கப்பல்கள் வருகின்றன : ஒவ்வொன்றும் தலா 30,000 மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் டீசலை தாங்கியவாறு வந்தடையவுள்ளது
2022-07-10 22:41:06 | General Issue
வாக்களிக்க வருவோருக்கு விசேட பாதுகாப்பு பாராளுமன்ற வீதிகள் முழுமையாக பூட்டு : ஊடகவியலாளர்களுக்கு விசேட அனுமதி : எம்.பிக்களுக்கான எரிபொருள் வழங்க திட்டம்
2022-07-19 09:19:13 | Politics