இராஜதுரை ஹஷான்
Politics

பாராளுமன்றத்தின் ஊடாக அரசியலமைப்பின் பிரகாரம் புதிய ஜனாதிபதி தெரிவு இடம்பெற்றிருந்தாலும், அதனை நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளாவிடின் சமூக கட்டமைப்பில் ஒருபோதும் அமைதி நிலவாது. தேர்தல் ஒன்று இடம்பெறும் வரை மக்களின் நம்பிக்கையை வெல்லக் கூடிய வகையில் இடைக்கால சர்வ கட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசியல் நெருக்கடி தீவிரமடைந்துள்ளதை எவராலும் மறுக்க முடியாது. தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் 69 இலட்ச மக்களாணையுடன் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட வகையில் பதவி விலகினார்.

முன்னாள் ஜனாதிபதியின் இரண்டரை வருட பதவிக் காலத்தில் நான்கு அமைச்சரவை ஸ்தாபிக்கப்பட்டதுடன், பிரதமர் நியமனம் இருமுறை இடம்பெற்றது. மக்களின் போராட்டம் வரலாற்று ரீதியில் அரசியல் கட்டமைப்பை முழுமையாக மாற்றியமைத்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகியதை தொடர்ந்து அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தின் ஊடாக புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், அதனை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இலங்கை அரசியல் வரலாற்றில் அரசியலமைப்பிற்கு அமைய ஒரு சில விடயங்கள் இடம்பெற்றிருந்தாலும் அதுவே பிற்பட்ட காலத்தில் சமூக மட்டத்தில் பாரிய விளைவுகள் ஏற்பட ஒரு காரணியாக அமைந்தது.

அரசியலமைப்பிற்கு அமைய எத்தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டு அதனை நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளாவிடின் சமூக மட்டத்தில் அமைதி  நிலவாது. தேர்தல் ஒன்று இடம்பெறும் வரை ஸ்தாபிக்கப்படும் இடைக்கால சர்வ கட்சி அரசாங்கம் நாட்டு மக்களின் நம்பிக்கையை முழுமையாக வெல்லும் வகையில் செயற்பட வேண்டும் என்றார்.

Visitors Stats
Flag Counter
Popular This Week
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய பின்னர் ? அரசியலமைப்பு கூறுவது இதுதான் !
2022-07-10 22:26:49 | Politics
வெப்பத்தால் திணறும் ஐரோப்பா : 1,000 க்கும் அதிகமானோர் பலி
2022-07-18 23:42:17 | Death
ஜனாதிபதிக்குரிய கொடியை கொண்டு சென்று படுக்கை விரிப்பாக பயன்படுத்தியவர் கைது : வீடியோ ஒன்றில் எரிக்கவுள்ளதாக தெரிவிப்பு
2022-07-29 21:43:51 | Arrest
இலங்கையில் 7 மாதங்களில் 6 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம்
2022-08-05 21:47:52 | General Issue
வடிவேல் சுரேஸ் MP மீதும் தாக்குதல் : வைத்தியசாலையில் அனுமதி
2022-07-10 22:29:40 | Politics
பாராளுமன்றம் கூடுகிறது ! இடைக்கால ஜனாதிபதி தெரிவிற்கான வேட்புமனு தாக்கல் இன்று ! நாளை இரகசிய வாக்கெடுப்பு ! களத்தில் ரணில், சஜித், அனுரகுமார, டளஸ்
2022-07-19 09:01:24 | Politics
அமரகீரத்தி எம்.பி. உள்ளிட்ட மூவர் கொலை : 8 சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்
2022-07-29 21:47:22 | Crime
கூரையை உடைத்து வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் மீட்பு
2022-08-05 21:52:47 | General Issue
லங்கா IOC நிறுவனத்துக்கு மூன்று எரிபொருள் கப்பல்கள் வருகின்றன : ஒவ்வொன்றும் தலா 30,000 மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் டீசலை தாங்கியவாறு வந்தடையவுள்ளது
2022-07-10 22:41:06 | General Issue
வாக்களிக்க வருவோருக்கு விசேட பாதுகாப்பு பாராளுமன்ற வீதிகள் முழுமையாக பூட்டு : ஊடகவியலாளர்களுக்கு விசேட அனுமதி : எம்.பிக்களுக்கான எரிபொருள் வழங்க திட்டம்
2022-07-19 09:19:13 | Politics