Virakesari News
Politics

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளை தீர்ப்பதற்கு சர்வ கட்சி அரசாங்கமல்ல. சர்வ கட்சி நிர்வாகமொன்றே ஸ்தாபிக்கப்பட வேண்டும். குறித்த சர்வ கட்சி நிர்வாகத்தின் கீழ் பாராளுமன்ற கண்காணிப்பு குழுக்களை நியமித்து அதன் ஊடாக நிர்வாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

சர்வ கட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்பதற்கு தாம் தயாராக இல்லை என்றும், சர்வ கட்சி நிர்வாகத்தில் நியமிக்கப்படவுள்ள பாராளுமன்ற கண்காணிப்பு குழுக்களுக்கு அதிகாரம் மிக்க தலைமைத்துவத்தினை வகிக்கத் தயார் என்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த புதனன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய கொள்கை பிரகடன உரையில் சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு சகல கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பகிரங்க அழைப்பினை விடுத்திருந்தார்.

அதற்கமைய இவ்வாரம் சர்வ கட்சி அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி பல தரப்பினருடனும் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட தரப்பினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. இந்நிலையிலேயே இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதமதாச, ஐக்கிய மக்கள் கூட்டணியின் பங்காளி கட்சிகளான தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேஷன், பிரதி தலைவர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்ரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் உள்ளிட்டோருடன் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

ஜனாதிபதியுடனான சந்திப்பு தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவிக்கையில், 'சர்வ கட்சி அரசாங்கம் என்பதை நாம் நிராகரிக்கின்றோம். மாறாக சர்வ கட்சி நிர்வாகமொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்பதையே நாம் வலியுறுத்துகின்றோம்.

சர்வ கட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்பதற்கு நாம் தயாராக இல்லை. பாராளுமன்றத்தில் கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும். அந்த குழுக்கள் அதிகாரம் மிக்க தலைமைத்துவப் பதவியை வகிப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

ஒரு வருட காலத்திற்கு இவ்வாறான சர்வ கட்சி நிர்வாகத்தில் எவ்வித ஊதியமும், கொடுப்பனவும் இன்றி பணியாற்ற நாம் தயாராக இருக்கின்றோம்.

இவை தவிர தற்போது அமுலில் உள்ள அவசர நிலைமை உடனடியாக இரத்து செய்யப்பட வேண்டும் என்றும், ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்களின் கைதுகள் உடன் நிறுத்தப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினோம். விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு அறிவித்து அது குறித்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.' என்றார்

Visitors Stats
Flag Counter
Popular This Week
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய பின்னர் ? அரசியலமைப்பு கூறுவது இதுதான் !
2022-07-10 22:26:49 | Politics
வெப்பத்தால் திணறும் ஐரோப்பா : 1,000 க்கும் அதிகமானோர் பலி
2022-07-18 23:42:17 | Death
ஜனாதிபதிக்குரிய கொடியை கொண்டு சென்று படுக்கை விரிப்பாக பயன்படுத்தியவர் கைது : வீடியோ ஒன்றில் எரிக்கவுள்ளதாக தெரிவிப்பு
2022-07-29 21:43:51 | Arrest
இலங்கையில் 7 மாதங்களில் 6 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம்
2022-08-05 21:47:52 | General Issue
வடிவேல் சுரேஸ் MP மீதும் தாக்குதல் : வைத்தியசாலையில் அனுமதி
2022-07-10 22:29:40 | Politics
பாராளுமன்றம் கூடுகிறது ! இடைக்கால ஜனாதிபதி தெரிவிற்கான வேட்புமனு தாக்கல் இன்று ! நாளை இரகசிய வாக்கெடுப்பு ! களத்தில் ரணில், சஜித், அனுரகுமார, டளஸ்
2022-07-19 09:01:24 | Politics
அமரகீரத்தி எம்.பி. உள்ளிட்ட மூவர் கொலை : 8 சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்
2022-07-29 21:47:22 | Crime
கூரையை உடைத்து வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் மீட்பு
2022-08-05 21:52:47 | General Issue
லங்கா IOC நிறுவனத்துக்கு மூன்று எரிபொருள் கப்பல்கள் வருகின்றன : ஒவ்வொன்றும் தலா 30,000 மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் டீசலை தாங்கியவாறு வந்தடையவுள்ளது
2022-07-10 22:41:06 | General Issue
வாக்களிக்க வருவோருக்கு விசேட பாதுகாப்பு பாராளுமன்ற வீதிகள் முழுமையாக பூட்டு : ஊடகவியலாளர்களுக்கு விசேட அனுமதி : எம்.பிக்களுக்கான எரிபொருள் வழங்க திட்டம்
2022-07-19 09:19:13 | Politics