அரசாங்க தகவல் திணைக்களம்
Politics

பாராளுமன்றத்தை அரசாங்கமாக மாற்றி, நாட்டை கட்டியெழுப்பும் தீர்மானங்களை எடுப்பதே சர்வ கட்சி அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சர்வ கட்சி அரசாங்கம் அமைப்பது குறித்து,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் நேற்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

22 வது அரசியலமைப்பு திருத்த வரைபு தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் கலந்துரையாடி பொதுவான இணக்கப்பாட்டுக்கு வருவதே சிறந்தது எனவும் அதற்கு அனைவரினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் இடைக்கால வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும், அதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாகவும்  ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழுக்களை உடனடியாக ஸ்தாபிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், அவற்றின் தலைவர்களுக்கு அலுவலக வசதிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டுக்கு அரச சேவையில் இருந்து அதி வினைத்திறன் வாய்ந்த சேவை தேவை என்றும் தெரிவித்தார்.

துறைசார் கண்காணிப்புக் குழுக்களின் தலைவர்களை அமைச்சரவைக்கு அழைக்க தாம்  தயார் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட சர்வ கட்சி அரசாங்கம் தொடர்பான ஆலோசனைக்கு மதிப்பளித்ததற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நன்றி தெரிவித்த மைத்திரிபால சிறிசேன, சர்வ கட்சி அரசாங்கத்திற்கு தமது கட்சி பூரண ஆதரவை வழங்கும் எனவும் தெரிவித்தார்.

அங்கீகரிக்கப்பட்ட அமைப்பில் சர்வ கட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என ஸ்ரீ.ல.சு. கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து இதனை வெற்றியடையச் செய்ய வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள் கோரிய மாற்றம் தற்போது இடம்பெற்றுள்ளதாக ஸ்ரீ.ல.சு. கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க சுட்டிக்காட்டியதுடன், சுனாமியின் போதும் யுத்த வெற்றியின் போதும் கைவிடப்பட்ட சந்தர்ப்பங்களை தற்போது கைவிடாமல் நாட்டை சரியான பாதையில் மீண்டும் கொண்டு செல்வதற்கு  நடவடிக்கை எடுப்பது அனைவரினதும் பொறுப்பாகும் எனக் குறிப்பிட்டார்.

சர்வ கட்சி ஆட்சிக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட 11 ஆலோசனைகள் அடங்கிய வேலைத்திட்டமும் நேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம்  கையளிக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, லசந்த அழகியவன்ன, ஜகத் புஸ்பகுமார, அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட குழுவினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் 10 வருடங்களுக்கு ஏற்ற பொருளாதாரத் திட்டத்தை வகுக்க அனைவரும் ஒன்றிணைந்து அதற்கான அடித்தளத்தை அமைக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

பொருளாதார வீழ்ச்சியும், பசியும் போராட்டக்காரர்களின் ஆரம்பத்திற்கு வழிவகுத்தது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, போராட்டக்காரர்கள் கடைசி நேரத்தில் வன்முறையுடன் போராட்டத்தை முடித்துக் கொண்டதாக தெரிவித்தார்.

அன்று பாராளுமன்றத்தை ஆர்ப்பாட்டக்காரர்களிடம் இருந்து பாதுகாக்காவிட்டால் இன்று ஜனநாயகம் பற்றி இவ்வாறு ஒன்றிணைந்து கலந்துரையாட வாய்ப்பே இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சர்வ கட்சி அரசாங்கம் தொடர்பில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. அது ஒருபோதும் மாறவே கூடாது என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

இங்கு உரையாற்றிய டலஸ் அழகப்பெரும, முறையான சர்வ கட்சி அரசாங்கத்துக்கான பேச்சுவார்த்தைக்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்றார். 

இந்தக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, சரித ஹேரத் மற்றும் நாலக கொடஹேவா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள், ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகார ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

Visitors Stats
Flag Counter
Popular This Week
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய பின்னர் ? அரசியலமைப்பு கூறுவது இதுதான் !
2022-07-10 22:26:49 | Politics
வெப்பத்தால் திணறும் ஐரோப்பா : 1,000 க்கும் அதிகமானோர் பலி
2022-07-18 23:42:17 | Death
ஜனாதிபதிக்குரிய கொடியை கொண்டு சென்று படுக்கை விரிப்பாக பயன்படுத்தியவர் கைது : வீடியோ ஒன்றில் எரிக்கவுள்ளதாக தெரிவிப்பு
2022-07-29 21:43:51 | Arrest
இலங்கையில் 7 மாதங்களில் 6 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம்
2022-08-05 21:47:52 | General Issue
வடிவேல் சுரேஸ் MP மீதும் தாக்குதல் : வைத்தியசாலையில் அனுமதி
2022-07-10 22:29:40 | Politics
பாராளுமன்றம் கூடுகிறது ! இடைக்கால ஜனாதிபதி தெரிவிற்கான வேட்புமனு தாக்கல் இன்று ! நாளை இரகசிய வாக்கெடுப்பு ! களத்தில் ரணில், சஜித், அனுரகுமார, டளஸ்
2022-07-19 09:01:24 | Politics
அமரகீரத்தி எம்.பி. உள்ளிட்ட மூவர் கொலை : 8 சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்
2022-07-29 21:47:22 | Crime
கூரையை உடைத்து வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் மீட்பு
2022-08-05 21:52:47 | General Issue
லங்கா IOC நிறுவனத்துக்கு மூன்று எரிபொருள் கப்பல்கள் வருகின்றன : ஒவ்வொன்றும் தலா 30,000 மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் டீசலை தாங்கியவாறு வந்தடையவுள்ளது
2022-07-10 22:41:06 | General Issue
வாக்களிக்க வருவோருக்கு விசேட பாதுகாப்பு பாராளுமன்ற வீதிகள் முழுமையாக பூட்டு : ஊடகவியலாளர்களுக்கு விசேட அனுமதி : எம்.பிக்களுக்கான எரிபொருள் வழங்க திட்டம்
2022-07-19 09:19:13 | Politics